மின்னம்பலம் -Selvam : யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று (மே 4) அவரை தேனியில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேனியில் உள்ள விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது,
கஞ்சா பயன்படுத்தியதாகவும்,
பெண் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில்,
“இன்று 04.05.2024-ம் தேதி காலை 07.00 மணிக்கு பழனிசெட்டிபட்டி வட்டக் காவல் ஆய்வாளர் C.சிவராமகிருஷ்ணன் ஆகிய நான் நிலைய அலுவலில் இருந்தபோது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் பாக்கியம் என்பவர் கொடுக்கலான தனிஅறிக்கையினைப் பெற்று பி.சி.பட்டி காவல் நிலையக் குற்ற எண்- 195/2024 U/S 294(b),353 IPC & 4 of TNPHW ACT & 8(c) r/w 20(b)(ii)(A), 29(1), 25 of NDPS ACT-ன் பிரகாரம் வழக்குப் பதிவு செய்தேன்.
தனியறிக்கை விபரம் பின்வருமாறு. தேனிமாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ந.பாக்கியம் ஆகிய நான் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு சமர்பிக்கும் தனிஅறிக்கை.
இன்று 04.05.2024 தேதி அதிகாலை சுமார் 01.15 மணிக்கு பழனிசெட்டிபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் N.பாக்கியம் ஆகிய நான் காவல் நிலையத்தில் ஆஜரில் இருந்த போது, பழனிசெட்டிபட்டி TO பூதிப்புரம் ரோட்டில் உள்ள தி ரிவேரா ரிசார்ட்டில் உள்ள ஒரு நபரை கைது செய்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து காவல் துறையினர் வந்திருப்பதாகவும் அந்த காவல் துறையினருக்கு உதவியாக செல்லுமாறு காவல் ஆய்வாளர் தெரிவித்ததன் பேரில், அதன் விபரத்தினை பொது நாட்குறிப்பில் 01. 20 மணிக்கு பதிவு செய்து நானும் சார்பு ஆய்வாளர் மணிமாறன், மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜா, தலைமைக்காவலர் -1498 கணேசன், ஆகிய போலீஸ் பார்ட்டியுடன் காவல் நிலையத்தில் இருந்து தி ரிவேரா ரிசார்ட்டுக்கு 01.30 மணிக்கு சென்ற போது அங்கு மூன்று நபர்கள் கோயம்புத்தூர் சிட்டி காவல் துறையினருடன் ரிசார்ட்டுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பெயர் விலாசம் பற்றி விசாரிக்க அவர்களது பெயர் 1) சங்கர் @ சவுக்கு சங்கர் த.பெ.ஆச்சிமுத்து, NO 12/6, TNHB பிளாட்ஸ், மதுரவாயில் சென்னை
2)ராம்பிரபு 22/2024 த.பெ. விஜயவீரன் முகமது அலி தெரு பரமக்குடி 3) ராஜரத்தினம் 43/2024 த.பெ.சக்கரவர்த்தி NO-3 முதலாவது மாடி, 2 -வது தெரு, குளக்கரை சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என பெயர் விலாசம் சொன்னார்கள்.
அவர்களிடம் நான் சட்டத்திற்கு உட்பட்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு செய்யுங்கள் என சொன்னதற்கு சவுக்கு சங்கர் என்னைப்பார்த்து நீ எல்லாம் பெரிய போலீசாடி நாயே என திட்டி என் மீது கையை வைத்து கீழே தள்ளிவிட்டு என்னை பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்தி உன்னை உயிரோடு எரிச்சு கொன்னுருவேன் என்று கொலை மிரட்டல் செய்தார்.
மேலும், ராம்பிரபு என்பவர் என்னை பார்த்து நீ என்னடி பொம்பள போலிஸ்னா பெரிய மயிரா என்று அசிங்கமாக பேசினார். அப்போது ராஜரத்தினம் என்பவர் என்னை பார்த்து நாங்க யாருனு தெரியாம எங்க கிட்ட விளையாடுறிங்க நாங்க சவுக்கு சங்கர் டீம், எங்களை பார்த்து இந்தியாவே பயப்படும் உன்னையும் உன் வேலையையும் எப்படி காலி பன்றோம் பாரு என்று தரக்குறைவாக பேசி என்னை மிரட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்து பிரச்சனை செய்தார். நான் அவர்களிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று அறிவுறுத்தினேன்.
பிறகு கோயம்புத்தூர் சிட்டி போலீசார் சவுக்கு சங்கர் என்பவரை மட்டும் கைது செய்து அழைத்துசென்று விட்டனர். அப்போது ரகசிய தகவலாளி ஒருவர் என்னிடம் வந்து மேற்படி மூன்று நபர்கள் ரிசார்ட்டின் கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருக்கும் TN-10-BL-2052 என்ற பதிவெண் கொண்ட சில்வர் மெட்டாலிக் கலர் இன்னோவா கிறிஸ்டா காரையும் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் அறையையும் சோதனை செய்யுங்கள் அவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார்கள் என்று இரகசிய தகவலை சொல்லிவிட்டு காரை அடையாளம் காட்டி விட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
அதன் பின் இந்த விபரத்தினை நான் காவல் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் எழுதி என்னுடனிருந்த போலீசார் மூலம் அனுப்பினேன். பிறகு காவல் ஆய்வாளர் என்னை சோதனை செய்ய சொல்லி அனுமதி வழங்கினார் .அதன் பிறகு நான் சோதனை மேற்கொள்வதற்காக தேனி வட்டாட்சியர் G.ராணி அவர்களுக்கு மேற்படி விபரத்தினை தகவல் சொல்லி தி ரிவேரா ரிசார்ட்டுக்கு வரசொல்லி தகவல் சொன்னேன்.
தகவலாளி சொன்ன விபரம் உண்மையாக இருந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதால் என்னுடன் இருந்த சார்பு ஆய்வாளர் மணிமாறன் என்பவரை காவல் நிலையத்திற்கு அனுப்பி வழக்கிற்கு தேவையான மடிக்கணினி, பென்டிரைவ், வெள்ளை பேப்பர், வெள்ளை நூல், சார்ஜர் எலெக்ட்ரானிக் தராசு, கார்பன் பேப்பர், SHO சீல், காக்கி கலர் பேப்பர், பேனா, மார்க்கர், பென்சில், போர்ட்டபிள் பிரிண்டர் ஆகிய உபகரணங்கள் மற்றும் புலன் விசாரணைக்கு தேவையான உபகரணங்களை நிலையத்தில் இருந்து எடுத்துவருமாறு சொன்னேன்.
அவர் உபகரணங்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். அதன் பிறகு தேனி தாசில்தார் G. ராணி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் மருதுபாண்டி ஆகியோர்கள் வந்தார்கள்.
நான் காவல் சீருடையில் இருந்த போதிலும் கூடுதலாக எனது அடையாள அட்டையை காண்பித்தும் என்னை அவர்களிடம் மீண்டும் சுய அறிமுகம் செய்து கொண்டு நீங்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சாவை உங்கள் வாகனத்தில் கடத்தி வந்துள்ளதாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
எனவே நான் உங்களையும் உங்களது வாகனத்தையும் தங்கியிருந்த அறையையும் சோதனை செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால் அருகிலுள்ள நீதித்துறை நடுவர் முன்போ அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் முன்போ சோதனை செய்யவேண்டும் என கேட்பதற்கு NDPS சட்டத்தில் உங்களுக்கு உரிமை உள்ளது என தெளிவாக எடுத்துக்கூறினேன்.
அதற்கு அவர்கள் இருவரும் தாசில்தார் முன்பு தான் சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.பின்பு சோதனை சம்மதக்கடிதம் தயார் செய்து G.ராணி மற்றும் தேனி மண்டல துணை வட்டாட்சியர் கி. மருதுபாண்டி ஆகியோர்கள் முன்னிலையில் சம்மதம் பெற்று காலை சுமார் 03.00 மணிக்கு அவர்களது TN-10-BL-2052 என்ற பதிவெண் கொண்ட சில்வர் மெட்டாலிக் கலர் இன்னோவா கிறிஸ்டா வாகனத்தை சோதனை செய்த போது ராஜரத்தினம் என்பவர் வாகனத்தின் முன் பகுதி டேஸ் போர்ட்டில் இருந்து 1) புளுகலர் ரெக்சின் பையையும் 2) பச்சை மற்றும் ப்ரவுன் பார்டர் போட்ட சிறிய கைப்பை இரண்டை எடுத்து ஆஜர் செய்து இரண்டு பைகளையும் திறந்து காட்டினார்.அதில் புளூகவர் ரெக்சின் பையில் இரண்டு பாலீத்தீன் பாக்கெட்டுகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது.
அதனை எலக்ட்ரானிக் தராசில் எடை போட்டு பார்த்த போது இரண்டு பாக்கெட்டுகள் ஒவ்வொன்றிலும் தலா சுமார் 100 கிராம் என மொத்தம் சுமார் 200 கிராம் கஞ்சாவும் பச்சை மற்றும் ப்ரவுன் பார்டர் போட்ட கலர் கைப்பையில் ஆறு பாலீத்தீன் பாக்கெட்டுகளில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது.
அதனையும் எலக்ட்ரானிக் தராசில் எடை போட்டு பார்த்த போது நான்கு பாக்கெட்டுகள் ஒவ்வொன்றிலும் தலா சுமார் 50 கிராம் என மொத்தம் சுமார் 200 கிராமும் இரண்டு சிறிய பாக்கெட்டுகளில் சேர்த்து சுமார் 9 கிராம் என மொத்தம் ஆறு பாக்கெட்டுகளிலும் சேர்த்து சுமார் 209 கிராம் கஞ்சா இருந்தது. ஆக மொத்தம் இரண்டு பைகளிலும் சேர்த்து சுமார் 409 கிராம் கஞ்சா இருந்தது.
3) BOO BOOS CANNA PRO 6 BROWN CONES என்று அச்சிடப்பட்ட கூம்பு வடிவ சிறிய பச்சை நிற காகித பெட்டி -2 இருந்தது. அந்த காகித பெட்டி ஒன்றில் உள்ள இரண்டு கோன்களில் காக்கி பேப்பரில் கஞ்சா சுற்றப்பட்டு கோன்ஸ்-2ம் அதில் கஞ்சா இல்லாமல் காக்கி பேப்பர் கோன் – 1 -ம் மற்றொரு காகிதபெட்டியில் கஞ்சா இல்லாமல் காக்கி பேப்பர் கோன் 3-ம் இருந்தது.
மேலும், கஞ்சா வாங்குவதற்கு பயன்படுத்திய கருப்பு நிறமுடைய ஐ போன் -1 மற்றும் வெளிர் பழுப்பு நிறமுடைய ஆப்பிள் செல்போன் -1 என இரண்டு செல்போன்களையும் மேலும் அவர்களது நண்பர்கள் கஞ்சா வாங்குவதற்கு கொடுத்த பணம் ரூபாய் 15,500/-( 31X500 நோட்டுகள்) ஆகியவற்றையும் கஞ்சா கடத்தி வருவதற்கு பயன்படுத்திய சவுக்கு சங்கருக்கு சொந்தமான TN-10-BL-2052என்ற பதிவெண் கொண்ட சில்வர் மெட்டாலிக் கலர் இன்னோவா கிறிஸ்டா கார் ஆகியவற்றை இராஜரத்தினம் என்பவர் ஆஜர்படுத்தியதை மேற்படி சாட்சிகளின் முன்னிலையில் 03.30 மணிக்கு அத்தாட்சி தயார் செய்து கைப்பற்றினேன்.
அதில் இராஜரத்தினம் மற்றும் சாட்சிகளிடம் கையெழுத்துப்பெற்றேன். மேற்படி காரில் கஞ்சாவை எதற்காக வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு இராஜரத்தினம் என்பவர் நாங்கள் மூன்று நபர்களும் தினந்தோறும் சுய பயன்பாட்டிற்காக கஞ்சாவை வைத்திருப்பதாக சொன்னார்கள்.
பின்பு 03.40 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த ரிவேரா ரிசார்ட்டில் அறை எண் 113 னை தாசில்தார் முன்னிலையில் சோதனை செய்தபோது வெள்ளை நிற பேப்பரில் WAVE என்று எழுதப்பட்ட நான்கு சிகரெட்டில் சிகரெட்தூள் மற்றும் கஞ்சா ஆகியவைகள் நிரப்பப்பட்டு சுருட்டி அவர்கள் ரூமில் வைத்து குடிப்பதற்கு வைத்திருந்ததையும் BOO BOOS CANNA PRO 6 BROWN CONES என்று அச்சிடப்பட்ட கூம்பு வடிவ சிறிய பச்சை நிற காகித பெட்டி -2 இருந்தது.
அதில் ஒவ்வொரு காகித பெட்டியிலும் தலா மூன்று கோன்களில் காக்கி பேப்பரில் கஞ்சா சுற்றப்பட்டு மொத்தம்-6 கோன்கள் இருந்தது. மேலும், 500 ரூபாய் நோட்டுகள் 100 எண்ணங்கள் கொண்ட 50,000/ – பணமும் 2) பிரௌன் கலர் பர்சு அதில் பணம் ரூபாய்-1640 (500 ரூபாய் நோட்டுகள்-02, 100 ரூபாய் நோட்டுகள்-05, 50 ரூபாய் நோட்டு-01, 20 நோட்டுகள்-04, 10 ரூபாய் நோட்டுகள் -01,
3) HDFC Bank Debit Card 05750016123000000681 4) ராம்பிரபு PAN CARD FOOPR3133G 5) ராம்பிரபு ஓட்டுனர் உரிமம் TN0920210000770
6) SBI GLOBAL ATM CARD 6522 9409 2026 9076 6) ராம்பிரபு ஆதார். அடையாள அட்டை 8026 4412 3095 7) Karnataka Bank Domestic DEBIT Card 81737416 0810 1898
8) SAVUKKU MEDIA PRIVATE LIMITED என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டு – 3,
9) ராம்பிரபுவின் புகைப்படம் – 2,
2) PROVOGUE என்று பிரண்ட் செய்யப்பட்ட கருப்பு கலர் பர்சு அதில் 1) HDFC Bank Debit card & RAJARATHINAM 4160 2108 1927 6406 2) SBI GLOBAL DEBIT CARD RAJARATHINAM C 4591-6601-6270-6966, 3) HSBC VISA CARD C RAJARATHINAM 4862 6989 2309 5848, 4) ராஜரத்தினம் PAN CARD AKKPR6981M 5) ராஜரத்தினம் ஆதார் அடையாள அட்டை 8236 2904 6853, 6) ராஜரத்தினம் குடும்ப அட்டை NPHH 333170174282 7) ராஜரத்தினம் ஓட்டுனர் உரிமம் TN0120000009460, 8)பணம் ரூபாய்- 390, 200 ரூபாய் நோட்டு-1, 100 ரூபாய் நோட்டு – 1, 50 ரூபாய் நோட்டு-1, 20 ரூபாய் நோட்டு-2.
மேலும் கருப்பு கலர் பர்சு-1, அதில் பணம் ரூபாய் 2070/-, 500 ரூபாய் நோட்டுகள்-4, 50 ரூபாய் நோட்டு-1, 20ரூபாய் நோட்டு-1, 2) சங்கர் ஆதார் அடையாள அட்டை -3 (அசல் 1, நகல் 1) 7993 6338 5473,
3) சங்கர் ஓட்டுனர் உரிமம் TNO2 20140007725 4) சங்கர் பான் கார்டு-2 ( அசல் – 1, நகல்- 1) BEOPS0125F,
5) HDFC BANK DEBIT CARD SANKAR A 4160 2108 3184 8570 6) ICICI BANK DEBIT CARD ACHIMUTHU SANKAR 40170400 0932 3436
7) சங்கர் புகைப்படங்கள் 3, SAVUKKU MEDIA PRIVATE LIMITED என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டு- 5. கருப்பு நிறமுள்ள பின்புறம் மூன்று கேமிராக்கள் உள்ள 1 செல்போன் -1 ஐ நிறுவன லேப் டாப் -0 1 மற்றும்
BLUE/BLACK SECOND SKIN என்று அச்சிடப்பட்ட புளு கலர் ரெக்சின் லேப் டாப் பை -01 மற்றும் டைடட்ன் வாட்சிகள் 2 ஆகியவற்றை எடுத்து ராம்பிரபு ஆஜர்செய்ததை 04.30மணிக்கு அத்தாட்சி தயார் செய்து கைப்பற்றியும் அந்த அத்தாட்சியில் ராம்பிரபு மற்றும் சாட்சிகளிடம் கையெழுத்துப்பெற்றேன்.
பின்பு சட்டவிரோதமாக போதை தரக்கூடிய கஞ்சாவை வைத்திருந்த குற்றத்திற்காக காரணம் கூறி ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் தேனி வட்டாட்சியர் G.ராணி மற்றும் தேனி மண்டல துணை வட்டாட்சியர் கி.மருதுபாண்டி முன்பு காலை சுமார் 05.30மணிக்கு கைது செய்தேன்.
எதிரிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட தடயப்பொருட்கள் மற்றும் சொத்துக்களுடன் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக வேண்டி இந்த அறிக்கையினை சமர்பிக்கிறேன்.
இப்படிக்கு (sd) N.Packiam SI, P.C Patti PS. 04/05/2024, Sir, Received the special report and registered a case in P.C.Patti PS Cr.No-195/2024 U/S 294(b), 353 IPC & 4 of TNPHW ACT & 8 (c) r/w 20 (b)(ii)(A), 29(1), 25 of NDPS ACT on 04.05.2024 at 07.00 hrs. (sd)/ C.Sivaramakrishnan inspector of Police. 04/05/2024.
இதன் முதல் தகவல் அறிக்கையின் அசலையும் வாதியின் புகாரையும் இணைத்து தேனி கனம் கூடுதல் மகிளா நீதிமன்றம் அவர்களுக்கும் மற்ற நகல்களை சம்மந்தப்பட்ட பிற அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக