மாலைமலர் : ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார். யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசியிருப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்.
அதில் என்ன பிரச்சினை?
யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விஜய்யின் கல்வி உதவித்தொகை வழங்கல் நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "விஜய்யின் கல்வி உதவி செயல்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக