வெள்ளி, 16 ஜூன், 2023

மணிப்பூர் கலவரம்: வரலாற்றில் ஒரு இருண்ட காலம்… பிரதமர் வாய் திறக்காதது ஏன்?:

 தினகரன்  மணிப்பூர் கலவரம்: வரலாற்றில் ஒரு இருண்ட காலம்… பிரதமர் வாய் திறக்காதது ஏன்?: வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் அமைதி குழு கேள்வி
இம்ப்ஹல்: மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றரை மாதமாக வாய்திறக்காத பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் சமாதானக் குழு வலியுறுத்தியுள்ளது. மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி முதல் துப்பாக்கி சத்தம் ஓய்ந்தபாடில்லை. அந்த மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தினர் மைய்தி சாதியினர் தங்களையும் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதற்கு ஆதரவாக ஆளும் மாநில பாஜக அரசு முயன்றது ஆகியவை வன்முறைக்கு வித்திட்டன. மக்கள் தொகையில் 53% பேர் உள்ள மைய்தி இன பழங்குடியினத்தில் சேர்க்க கூடாது என்று வலியுறுத்தி மே 3-ம் தேதி பழங்குடியின மாணவர்கள் நடத்திய பேரணி பயங்கர வன்முறையில் முடிந்தது. தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மேலும் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



இது குறித்து பேட்டியளித்த முதலமைச்சர் பைரேன் சிங் வன்முறையாளர்கள் உடனே கைது செய்யப்பட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத பிரதமர் மோடிக்கு மைய்தி இன குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் வரலாற்றில் தற்போதைய சூழல் ஒரு இருண்ட காலம் என்று வடகிழக்கு இந்தியாவுக்கான பெண்கள் அமைதி குழு கூறியுள்ளது. இதனிடையே முகாம்களில் தங்கி இருப்பவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை: