சனி, 17 ஜூன், 2023

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா கைது..

tamil-nadu-bjp-secretary-sg-suryah-arrested-by-police

tamil.oneindia.com  - Nantha Kumar R  : மதுரை: தமிழ்நாடு பாஜக மாநி செயலாளர் எஸ்ஜி சூர்யாவை மதுரை போலீசார் நேற்று நள்ளிரவில் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. மாநில தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். இவர் அண்ணாமலையுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் கூட செய்துள்ளார்.
எஸ்ஜி சூர்யா, சென்னையை சேர்ந்தவர். இந்நிலையில் தான் எஸ்ஜி சூர்யாவை மதுரை மாநகர போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் எஸ்ஜி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.


எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டு இருப்பதை பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் தனது ட்விட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இருப்பினும் கூட எஸ்ஜி சூர்யா எதற்காக கைது செய்யப்பட்டார்? என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை: