சனி, 17 ஜூன், 2023

மலையகம் 200 ஆண்டுகள் கவிஞர் எஸ்தர்

Esther Nathaniel :  மாறி மாறி ஆட்சிக்கு வரும் இலங்கை  அரசாங்கம் அய்ந்து வருசத்தில் தாமரைக் கோபுரத்தை கட்டியது
 அதிவேக பாதைகளை கொழும்பைச் சுற்றி அமைத்தது கோத்தா கோ கமவில் புரட்சி மூலம் எரிக்கப்பட்ட பாராளுமன்ற மந்திரிகளின் வீடுகளை சீர் செய்தது
 கொழும்பில் ராணி பாலத்தைக் கட்டி மலர் தூவீயது
 விமானமே வர முடியாத மத்தள விமன நிலையத்தை காசைக் கொட்டி கட்டி வைதத்துள்ளது.
கடந்த 200 வருடங்களாக இந்த மண்ணுக்கு மண்வெட்டியா தேஞ்சி மாடா உழைச்சீ இந்த நாட்டின் பெருந்தோட்டத்துறையில்,
 இன்றுவரை   கூடையை தலையிலும் நாட்டின் கடனை முதுகிலும் சுமந்து நாள்தோறும் தேயிலை காடுகளில் ஏறி இறங்கும் இம்மக்களுக்கு அவர்கள் வாழும் லயங்களை சரி திருத்தி கொடுத்துள்ளதா ??? இல்லை!
எல்லோருக்கும் வீடுகளை கட்டி கொடுத்துள்ளதா??
நாட்டுக்கு உழைப்பவனுக்கு வீடா இல்லை எங்கிருந்தோ ஒரு நாளில் வந்து மேல் ஏறி கொழும்பை பார்த்துவிட்டு இறங்கும் தாமரை கோபுரமா நாட்டுக்கு தேவை ??
இதை யார் தீர்மானிப்பது மக்கள் வாக்கு வழங்கிய அரசியல்வாதிகள்தானே உயர்மட்ட அதிகாரிகள்தானே???


 



கருத்துகள் இல்லை: