திங்கள், 9 ஜனவரி, 2023

கெட் அவுட் ரவி... தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் #GetOutRavi hashtag ஹேஷ்டேக்

 மாலை மலர்  :  சென்னை  தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
"சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்... இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை" என திமுக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.



ஆளுநர் பதவியில் தொடர ஆர்.என்.ரவிக்கு தகுதியில்லை என்றும், அவர் முழு நேர ஆர்எஸ்எஸ் பணிகளையே மேற்கொள்ளலாம். சனாதனத்திற்கு திராவிடத்தின் மீது எப்போதுமே ஒவ்வாமை தான்! என்பதுபோன்ற கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: