tamilmurasu.com : தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பனிப்போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு என்று சொல்வதைக் காட்டிலும் தமிழகம் என்று அழைப்பதே சரி என்று அண்மையில் ஆளுநர் ரவி பேசியது தமிழகம் முழுவதும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது.
அந்த எதிர்ப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சட்டமன்றக் கூட்டத்தைப் பாதியில் புறக்
கணித்துவிட்டு அவர் வெளியேறினார்.
புத்தாண்டு தொடங்கியதும், மாநில அரசு நிறைவேற்றவிருக்கும் திட்டங்களையும் கடைப்
பிடிக்க இருக்கும் கொள்கைகளையும் சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிப்பது வழக்கம்.
மாநில அரசு எழுதிக் கொடுத்ததை அவர் வாசிக்க வேண்டும் என்பது மரபு. அந்த வகையில் நேற்று முன்தினம் மன்றத்தில் உரையாற்றிய திரு ரவி, எழுதிக் கொடுத்ததை அப்படியே படிக்காமல் சில திருத்தங்களைச் செய்திருந்தார்.
குறிப்பாக, அம்பேத்கர், காமராஜர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை அவர் வாசிக்காமல் தவிர்த்தார். இச்செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே கண்டனம் தெரிவித்துப் பேசினார்.
மேலும், மன்ற விதிகளைத் தளர்த்தி, ஆளுநருக்கு எதிராக அவசரத் தீர்மானம் கொண்டு வந்து அவர் நிறைவேற்றினார். திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
‘பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளைத் திணிக்காதே’ என்றும் அவர்கள் உரக்கக் கத்தினர். அதனால் எரிச்சலடைந்த ஆளுநர், சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. டுவிட்டரில் அண்மைய நாள்களாகப் பிரபலமடைந்து வரும் #GetOutRavi என்னும் ‘ஹேஷ்டேக்’ நேற்று சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளாக இடம்பெற்றது. தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக நேற்று சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கோவை, திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு ஆளுநர் ரவியின் உருவபொம்மையை எரித்துக் கைதாயினர்.
ஆளுநர் பதவி விலகக்கோரி ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் எதிரே நாளை மறுதினம் (ஜனவரி 13) ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசிடம் ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும் அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக