மாலைமலர் : தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளது. நிலநடுக்கங்கள், புயல்கள், வெள்ளம், சுனாமி என அந்த நாடு அடிக்கடி இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடாக உள்ல்ளதாக உலக பேரிடர் அறிக்கையின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக