செவ்வாய், 16 நவம்பர், 2021

சேது சமுத்திரம் ..தென்னிந்தியாவின் சூயஸ் கால்வாய்! யாரால் நின்றுபோனது?

May be an image of map, sky and text that says 'INDIA Bay of Bangal Tamil Nadu Arablan Sea Sethusamudram Rame swaram ship canal laland Dhanushkodl Tuticorin Paik Bay Gulf Gulfof of Mannar SRI LANKA Colombo route Present Indian Ocean'
May be an image of map and text

கபிலன் காமராஜ் :  சுவீடனின் கோதா கால்வாயும் - தமிழ்நாட்டின் சேதுசமுத்திர கால்வாயும்
இங்கிலாந்தில் இருந்து North Sea வழியாக வந்து டென்மார்க் அருகே Baltic கடலுக்குள் நுழைந்தால் ரஷ்யா, போலந்து, பின்லாந்து, வடக்கு ஜெர்மனி, டென்மார்க், சுவீடனின் தலைநகர் ஸ்டோக்ஹோல்ம் என பல இடங்களை கடல் வழியாக சென்று சேர முடியும். பால்டிக் கடல் தான் வடக்கு ஐரோப்பாவின் வர்த்தக வழி. ஆனால் 1856யில் கிரிமியா போர் முடியும் வரை பால்டிக் கடலில் நுழைய டென்மார்க் நாட்டிற்கு சுங்க வரி கட்ட வேண்டும்.
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோல்ம் கிழக்கில் இருந்தது. அங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, தெற்கு ஐரோப்பிய நாடுகளோடு வணிகம் செய்ய சுவீடன் கப்பல்கள் டென்மார்க் நாட்டிற்கு கப்பம் கட்டிவிட்டு தான் பால்டிக் கடலை விட்டு வெளியேறவோ, நுழையவோ முடியும்.  ஆனால் சுவீடனின் மேற்கில் இருந்த கோத்தென்பெர்க் நகரின் துறைமுகத்திற்கு அந்தச் சிக்கல் இல்லை. அங்கிருந்து சுவீடன் தன் கடல் வழி வணிகத்தை செய்ய முடியும்.


ஆனால் சுவீடனில் உற்பத்தியாகும் மரம், கரி, இரும்பு உள்ளிட்ட கனிம வளங்களை எப்படி கப்பல் இல்லாமல் கிழக்கில் இருந்து மேற்கிற்கு கொண்டு செல்வது. உள்வரும் பொருட்களை மேற்கில் இருந்து கிழக்கில் இருக்கும் தலைநகருக்கு கொண்டு வருவது என்ற சிக்கல் இருந்தது.
1810 ஆண்டு 190km தூர Gota Canal எனும் கால்வாய் வெட்டும் பணியை சுவீடன் துவங்கி, 1832ஆம் ஆண்டு முடித்தார்கள்.
கிழக்கில் Söderköping என்ற இடத்தில பால்டிக் கடலில் இருந்து கால்வாய் வெட்டி Motala என்ற நகரில் Vattern எனும் பெரிய ஏரியோடு இணைத்தார்கள். Vattern ஏரியின் மறுமுனையில் Karlsborg என்ற நகரில் கால்வாயை தொடர்ந்து Sjotorp என்ற இடத்தில Vanern என்ற மற்றொரு பெரிய ஏரியோடு இணைத்தார்கள்.
Vanern ஏரியின் மற்றொரு முனையில் இருந்த Trollhatten நகரில் இருந்து Trollhätte கால்வாய் வழியாக Gota Alv ஆற்றில் இணைந்தார்கள். Gota Alv ஆறு பால்டிக் கடலை சேருமிடம் கோத்தென்பர்க் நகரம். அங்கிருந்து டென்மார்க்கின் சுங்க வரியின்றி வர்த்தகம் செய்ய முடிந்தது.
சுவீடனின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்த நீர் வழி போக்குவரத்தின் மொத்த தூரம் 390km.  
ஆனால் வெகு காலம் இதன் தேவை இருக்கவில்லை. 1855யில் ரயில்கள் வந்த பின்னர் நீர் வழி போக்குவரத்தின் தேவை குறைந்தது. அட வீணாக கால்வாய் வெட்டிவிட்டார்கள் என நினைத்தால் அது தவறு.
இந்த Gota கால்வாய் வெட்டுவதற்கு தேவைப்படும் இயந்திரங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய Motala நகரில் தொழிற்சாலைகள் உருவாகியது. கால்வாய் பணி முடிந்த பின்னர் சுவீடன் நாட்டிற்கான ரயில்களை உற்பத்தி செய்ய துவங்கியது, பின்னர் விமானங்களை உற்பத்தி செய்யத் துவங்கியது. Motala Verkstad சுவீடன் நாட்டின் பொறியியல்  தொழிற்சாலைகளின் தொட்டில் என அழைக்கும் அளவிற்கு சுவீடன் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அது வித்திட்டது.
கோத்தென்பெர்க் துறைமுகம் நோர்டிக் நாடுகளின் (டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து) மிகப் பெரிய துறைமுகமாக உருவானது.   
இப்படியான ஒரு நீர் வழி வர்த்தகம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டும் என்று தான் கலைஞர் சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுத்தார்.
இந்தியப் பெருங்கடலில், அரபிகடலில் இருந்து வரும் கப்பல்கள் இலங்கை கொழும்பு துறைமுகத்தை  முக்கிய இடமாக கொண்டு செயல்படுவதற்கு பதிலாக தமிழ்நாட்ட்டிற்கும் இலங்கைக்கும் இடையே புகுந்து வந்து தமிழ்நாட்டு துறைமுகங்களை பயன்படுத்தும் சேது கால்வாய் திட்டம்.  
தமிழ்நாட்டின் துறைமுகங்கள் பலம் பெற்றால், தமிழ்நாட்டின் தொழில்வளம், பொருளாதாரம் பலம் பெறும் என்று கலைஞர் முன்னெடுத்த சேது சமுத்திர திட்டத்தை ராம பக்தர்களும், பூவுலகு பூமர்களும் எதிர்த்தனர்.
Panama Canal, Suez Canal போல,
Singapore, Gibraltar போல
கடல் வணிக வளர்ச்சியை கொடுக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் போனது.
சேது சமுத்திர திட்டம் எண்ணிலடங்கா வேலை வாய்ப்புகளை, வளர்ச்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கும். அதை நாசம் செய்த பெருமை சங்கிகளையும், பூவுலகு பூமர்களையும் சேரும்.

1 கருத்து:

'பசி'பரமசிவம் சொன்னது…

மூடர்களின் ஆதிக்கம் உள்ளவரை சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாத கனவுதான்.