Rayar A - Oneindia Tamil : சென்னை: தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:- 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
DMK MPs meeting to be held tomorrow in chennai அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் மழை நிவரான பணிகள், மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற தொகை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் தி.மு.க. எம்.பி.க்கள்
எவ்வாறு செயல்பட வேண்டும்? எந்தெந்த பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும்? என்பது குறித்தும் எம்.பி.க்களுடன் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து சர்ச்சையாக இருந்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து முக்கியமாக பேசப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள், நீட் தேர்வு விவகாரம், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக