ஞாயிறு, 14 நவம்பர், 2021

கோவை சின்மயா வித்தியாலயா முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் கைது.. பதுங்கி இருந்தார்

பள்ளி முதல்வர் மீரா

  Vishnupriya R  - Oneindia Tamil :  கோவை: கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை, தற்கொலைக்கு மாணவியை தூண்டிய விவகாரத்தில் ஏற்கெனவே இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த பள்ளியில் தனக்கு படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோரிடம் மாணவி பெற்றோரிடம் மாணவி இதையடுத்து வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறு பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார்.


இதையடுத்து அவரது பெற்றோர் அந்த சிறுமியை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்குக்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது அழுது கொண்டிருந்ததும் தெரிகிறது.
இதுகுறித்து அவரது தாய் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என கூறி சமாளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை விவகாரம்:கோவை விவகாரம்:"பஸ்ஸில் யாரோ இடிப்பது போல்"னு கடந்த போது! அந்த மனம் எப்படி துடித்திருக்கும்?
 அந்த மாணவிக்கு சின்மயா பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவரது தொல்லை தாளாமல்தான் அந்த மாணவி வேறு பள்ளிக்கு டிசி வாங்கிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வேறு பள்ளிக்குச் சென்ற பின்னரும் அந்த மாணவியை விடாமல் மிதுன் தொல்லை செய்து வந்தது தெரியவந்தது.
இயற்பியல் ஆசிரியர் மிதுன் இயற்பியல் ஆசிரியர் மிதுன் இதையடுத்து இயற்பியல் ஆசிரியர் மிதுனையும் அவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பேருந்தில் யாராவது இடித்துவிட்டது போல் இதை கடந்த போ என கூறியதாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனையும் கைது செய்யுமாறு சக மாணவிகள், அவர்களது பெற்றோர், இறந்த மாணவியின் பெற்றோர், உறவினர், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அது போல் பாலியல் குற்றத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டம் பாயந்தது.
பள்ளி முதல்வர் மீரா பள்ளி முதல்வர் மீரா இதையடுத்து தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா சக்கரவர்த்தியை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது.

இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்த போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்யும் வரை மாணவியின் உடலை மாட்டோம் என மறுத்து பெற்றோரும், உறவினர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பள்ளி முதல்வர் மீரா கைது பள்ளி முதல்வர் மீரா கைது இந்த நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் நடவடிக்கைகளில தனிப்படை போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: