செவ்வாய், 16 நவம்பர், 2021

சிவகாசியில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. அப்படியே தரைமட்டமான கட்டிடம்.. 3 பேர் மாயம்.. பரபர தகவல்

Vigneshkumar  - tamil.oneindia.com  : விருதுநகர்: சிவகாசியில் உள்ள நேருஜி நகரில் உள்ள குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது -
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
விருதுநகர் சிவகாசியில் உள்ள நேருஜி நகரில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவருக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது.
இதில் கீழ் தளத்தில் ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான குழாய் கம்பெனியும் மேற்தளத்தில் குடும்பத்தினரும் வசித்து வந்துள்ளனர்தீபாவளி சமயத்தில் தனது கம்பெனி இருக்கும் கட்டிடத்தில் ராமநாதன் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை இருப்பு வைத்து, அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறவில்லை.

தீபாவளி முடிந்த பிறகும் கூட பட்டாசுகளின் மூலப்பொருட்கள் எவ்வித அனுமதியும் இல்லாமல் அங்குச் சேமித்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மாலை 3 மணியளவில் அங்குச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 3 பேரைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.p>வீட்டின் இடிபாடுகளை பொக்லைன் மூலம் அகற்றி 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இடிந்த கட்டடத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதால் மீட்புப் பணிகள் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமநாதன் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: