நக்கீரன் தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று ஊரடங்கால் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, உயர் கல்வித்துறைச் செயலாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், அனைத்து வகை கல்லூரி கல்வியியல் இயக்குநரகம், அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா காலகட்டம் முடிந்துவிட்டது. அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இணையதள வழியில் தேர்வுகளை நடத்த வலியுறுத்தி அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக