வெள்ளி, 19 நவம்பர், 2021

சிந்துவெளி நாகரிக எழுத்துக்களை தமிழ் மொழி அடிப்படையிலேயே படிக்க முடியும் ..இவற்றை வேத புராண செய்தியாக்குவது மோசடி

No photo description available.
No photo description available.

PoornaChandra Jeeva  : The  Indus Script .  Pasupathi  Seal - Mohenjo daro  :  No . 2420
    To clear the most wrong conception that of reading the seals of the Indus script on the basis of the  latter Vedic  and Puranic  meanings , this note was posted  .
      The seals  of the Indus script  was  historically oldest than 1000 years to the Vedic and Puranic matters in which the life and culturer of native people  of the Indian Sub continent  revealed  .
       The seal of Mohenjodaro no : 2420
Was considered by Sir John Marshall  and enumerated by him as Pasupathi seal  clearly indicated that it was Proto Siva  a God of the origin of the Indian  agricultural society  .
        Deciphering this seal as Puranic or Vadic matter is a historical fault on the basis of the historical and archaeological evidences  . We can read the Indus script only by the  Tamil  a primary  language of the Dravidian family of languages  . This seal script reads as  :
               a   l   av    i    ca    ca      
            =   Al   av   Icaka
# The  lord  Icaka who is an elderly ascetic  
         பசுபதி  முத்திரை
         மொகஞ்ச தாரோ  :  2420
       சிந்து எழுத்தைக் காலத்தால் பிற்பட்ட வேத , புராணங்களின்  அடிப்படையில் பொருள் கொண்டு படிப்பதில் உள்ள தவறினை விளக்க இப்பதிவு இடப்படுகிறது .


        சிந்து நாகரிக எழுத்துகள் வேத        புராணச் செய்திகளைவிட 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை யுடைய இந்தியத் துணைக் கண்ட மக்களின் வாழ்க்கையையும் , பண்பாட்டையும் வெளிப்படுத்து கின்றன .
         சர்  ஜான்  மார்ஷலால் கருத்துரைக் கப்பட்ட  மொகஞ்ச தாரோ முத்திரை எண் :  2420            அவரால் பசுபதி முத்திரை என்று விளக்கப் பட்டுள்ளதோடு ,  இந்த  முத்திரைக் குறிப்பிடும் இறைவனை இந்திய  வேளாண் சமுதாயப் பண்பாட்டில் தோன்றிய  முந்து  சிவன் என்றும்  உணர முடிகிறது .
        இந்த முத்திரையை வேத , புராணச் செய்தியாகப் படிப்பது வரலாறு மற்றும் தொல்லியல் சான்று களின் அடிப்படையில் ஒரு வரலாற்றுப் பிழையாகிவிடும் . நாம் இந்த முத்திரையைத்  திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மை மொழியான தமிழ் மொழியின் அடிப்படையிலேயே  படிக்க முடியும் . முத்திரையைக் கீழ்க் கண்டவாறு படிக்கலாம்  :
           ஆ    ள்    அவ்    ஈ     ச    க
         =   ஆள்  அவ்   ஈசக  
#  ஆண்டவனாகிய தவம்மூத்த ஈசக .

கருத்துகள் இல்லை: