வெள்ளி, 26 மார்ச், 2021

பச்சை தமிழன் நாப்கின் அருணாசலம் முருகானந்தம் ஹிந்திக்காரரா? Pad man திரைப்பட திரிபு

 செல்லபுரம் வள்ளியம்மை : மகளிர் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின் ஏழைகளுக்கு பயன்பட  கூடிய வகையில் மலிவு விலையில் சுயமாக தயாரித்து அதில் பெரும் புரட்சியை படைத்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த  திரு அருணாசலம் முருகானந்தம் அவர்கள்.
இவரின் வாழ்க்கை வரலாற்று படமான pad man இல் இவரை (கதாநாயகனை) ஏன் ஒரு ஹிந்திக்காரனாக காட்டினார்கள்?
அது ஒரு உண்மை கதை . அது ஒரு தமிழ்நாட்டு  மண்ணின் மைந்தனின் வாழ்க்கை அனுபவம்.
அதை ஹிந்திகாரனாக காட்டியது ஒரு மோசடி அல்லவா?
இதுதான் வடநாட்டு மேலாதிக்க சிந்தனை .
கொஞ்சம் கூட நேர்மை உணர்வே அற்ற ஒரு கலாச்சாரம்.
அசல் திருட்டு புத்தி!
ஒரு பிரெஞ்சுகாரனின் வாழ்வில் நடந்த சம்பவம் பற்றிய படத்தை ஆங்கிலத்தில் எடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஒரு பிரெஞ்சுகாரனாகவே காட்டி இருப்பார்கள்
திரு அருணாசலம் முருகானந்தத்தின் நாப்கின் கண்டுபிடிப்பில் தமிழ்நாட்டின் சமூகவியல் சிந்தனை எல்லாமே அடங்கி இருக்கிறது.
இந்த மண் ஒரு குட்கா பான்பராக் மண்ணல்ல  இது ஒரு அறிவியல் தேடல் மண்.
திரு அருணாசலம் முருகானந்தத்தின் உலக புகழை ஹிந்திக்காரர்கள் களவாடிய கதைதான் அக்சாய குமார் நடித்த pad man என்ற படம் .
இது ஒரு மோசடி முயற்சி  இதை ஏற்றுக்கொள்ள முடியாது  

கருத்துகள் இல்லை: