வெள்ளி, 26 மார்ச், 2021

திமுகவின் கலப்புத் திருமண ஊக்கத்தொகை.. அவதூறு வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை

 Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: கலப்புத் திருமண ஊக்கத்தொகை வாக்குறுதி விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பி வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன் சமூக ஊடகங்களில் திமுகவின் கலப்புத் திருமண ஊக்கத்தொகை வாக்குறுதி குறித்து பரப்பப்பட்டுள்ள வீடியோக்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமண ஊக்கத்தொகை தொடர்பாக அளித்த வாக்குறுதியை ஒரு பெண் அவதூறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டார்.
குறிப்பிட்ட பெண்கள் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் குறிப்பிட்ட சில சாதிப் பெண்களை பட்டியலின சாதியினர் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் திமுக வாக்குறுதி அளித்திருப்பதாக அவதூறான விமர்சனங்கள் இருந்தன.
புகார் அளித்தனர் இந்நிலையில் சிலர் சமூக வலைதளம் முழுவதும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமண ஊக்கத்தொகை தொடர்பாக அளித்த வாக்குறுதியை சிலர் அவதூறாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிடவும் தொடங்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர், திமுக தலைமைக்கு தெரிவித்தனர். இதையடுத்து திமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது,

என்ன புகார் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் திமுக தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணம் செய்தால் உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திரித்து பெண் ஒருவர் பல்வேறு சமுதாயப் பெண்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறது என பொருள்படும்படி காணொலியை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து வீடியோவை நீக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்து .

போலீசுக்கு உத்தரவு அதன் தொடர்ச்சியாக பெண்ணின் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கலப்புத் திருமண ஊக்கத்தொகை குறித்து அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: