செவ்வாய், 23 மார்ச், 2021

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல்ஹாசன் பேச்சு

நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல்ஹாசன் பேச்சு
நக்கீரன் : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது.
சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.          இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசார நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்துள்ளதால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழவேண்டும் என நினைத்துதான் அரசியலுக்கு வந்துள்ளேன்’ என்றார்.

 

கருத்துகள் இல்லை: