சனி, 27 மார்ச், 2021

மீனவர்கள் படகுகளுடன் விடுவிப்பு ! இலங்கை கடற்படையில் பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினார்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்கள் படகுகளுடன் விடுவிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சொந்த ஊர் திரும்பினர்
.dailythanthi.com : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர். நேற்று மாலை 20 மீனவர்கள் ராமேசுவரம் வந்தடைந்தனர். ராமேசுவரம், ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 54 பேர், எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, இதுகுறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 20 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டன.

காரைக்கால் மீனவர்கள்

காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை வருகிற 8-ந் தேதி வரையிலும் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஊர்க்காவல் துறை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விடுவிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளுடன் சொந்த ஊர் திரும்பவும் இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.

அதன்படி ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் தங்கள் படகுகளில் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊர் வந்தனர்.

இதே போல் இலங்கையில் இருந்து நாகை மீனவர்களும் தங்கள் படகில் புறப்பட்டனர்.

 

கருத்துகள் இல்லை: