ஞாயிறு, 21 மார்ச், 2021

ஜெயலலிதா மரணம் பற்றி.. ஸ்டாலின், உதயநிதி பேசக் கூடாது.. தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

Will investigate Jaya's death when DMK comes to power': MK Stalin at TN  rally | The News Minute

  tamil.oneindia.com -  Veerakumar :  சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு அளித்துள்ளது.
பாஜகவின் கிளைதான் அதிமுக; நம்ம உரிமையை மோடியிடம் அடகு வச்சிருக்காங்க.. தக்கலையில் பொங்கிய ஸ்டாலின்!
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தங்ககுடைய ஒவ்வொரு பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, மறைந்த தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மக்களிடையே பேசி வருவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விமர்சிக்கும் விதமாக ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு இதுபோன்று பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தன் பெயர், நாமக்கல் மற்றும் ராசிபுரம் அகிய இரண்டு இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: