வெள்ளி, 26 மார்ச், 2021

கலைஞர் உமா மகேஸ்வரனிடம் கூறியது : உங்களை நீங்களே அழித்துக்கொள்கிறீர்களே? ஒரு முன்னாள் போராளியின் வாக்குமூலம்!

May be an image of one or more people, people standing, tree and outdoors

Vetri Chelvan : தமிழ்நாட்டில் விடுதலை இயக்கங்களை ஆதரித்த பெரும்பான்மையான தலைவர்கள் சகோதரப் படுகொலையை கண்டிக்கவில்லை. கலைஞர் கருணாநிதி மட்டுமே கண்டித்தார். எமது செயலதிபர் உமா மகேஸ்வரன கலைஞர் கருணாநிதியே சந்திக்கும்போதெல்லாம் யார் உங்கள் எதிரி, உங்களை நீங்களே எல்லாம் அழித்து கொள்கிறீர்கள்., என்று மனம் நொந்து பலமுறை கூறியுள்ளதாக செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறினார். எமது செயல்பாடுகளால் கலைஞர் கருணாநிதி எங்கள் போராட்டத்தை பின்பு மனப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை.   புலிகளை ஆதரித்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் பிரபாகரன் இடம் சகோதர படுகொலை பற்றி கண்டித்து கூறியிருந்தால், கட்டாயம் பிரபாகரன் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். காரணம் பிரபாகரன் தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஒரு கதாநாயகனாகவே விளங்கினார். ஆனால் அவரை ஆதரித்த தமிழக தலைவர்கள் விடுதலைப்புலிகள் என்ன தவறு செய்தாலும் ஆதரிப்பதோடு, அவர்கள் யாரைக் கொலை செய்து துரோகி என்றாலும் கொலை செய்யப்பட்டவர் பற்றி தெரியாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களும் ஆமாம் துரோகியை தான் கொன்றார்கள் என்று கூறுவார்கள். எந்தஒரு தமிழ்நாட்டு தலைவரும் எமது ஆயுதப்போராட்ட தலைவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்க வில்லை என்பது கவலைக்குரிய விடயம்.  

Vetri Chelvan : · பகுதி 69 1982 முதல் 1990 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் 

நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை நேரடி அனுபவங்களை பதிவாக போடும்போது, ஒரு சில அதி புத்திசாலி நண்பர்கள் இந்திய கைக்கூலி என்று என்னை குற்றஞ்சாட்டி கருத்துக்களை கூறுகிறார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தம் வரை விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து பெரிய இயக்கங்களும் இந்திய மத்திய அரசின் உதவியை பெற எப்படி பாடுபட்டார்கள், டெல்லியில் நடந்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஒவ்வொரு இயக்கமும் தான் தான் தான் தான் இந்திய விசுவாசி என்று காட்டிக்கொள்ள முயன்றதையும் நான் நேரில் பார்த்தவன். புதுடில்லியில் 87 ஆம் ஆண்டு வரை நடந்த இந்திய அரசுக்கும் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் நடந்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில், இயக்கங்கள் இந்திய அரசோடு பேசிய முறையும் அதன்பின்பு வெளியில் இயக்கத் தலைவர்கள் விடும் அறிக்கைகளையும் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். 

இதில் எந்த இயக்கமும் விதிவிலக்கல்ல. இயக்கத் தலைவர்கள் பொய்யாக விட்ட இந்திய எதிர்ப்பு அறிக்கைகளை இன்றும் பலபேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் ஆரம்பத்திலிருந்து இந்திய எதிர்ப்பாளர் என்று இன்றுவரை கூறுகிறார்கள். ஆனால் உள் இயக்க முரண்பாடுகளால் எமது அரசியல் பிரிவு தலைவர் சந்ததியார் கொலை செய்யப்பட்ட பின்பு ஏற்பட்ட தமிழ்நாட்டு காவல்துறை நெருக்கடிகளால் ,டெல்லி வந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் சந்ததியார் இந்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், இந்திய அரசுக்கு எதிராக வங்கம் தந்த பாடம் என்ற மொழிபெயர்ப்பு தமிழ் புத்தகத்தை அச்சடித்து முகாம்களிலுள்ள தோழர்களுக்கு விநியோகித்து இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட படியால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்று கூறினார். அவர் கூறும்போது நானும் பக்கத்தில் இருந்தேன். இந்திய அதிகாரிகளிடம் தொடர்ந்து இதையே கூறும்படி என்னிடம் கூறினார்.

இந்தியாவில் ஈழ விடுதலை இயக்கங்களில் பொறுப்புகளிலிருந்த எல்லோருக்கும் இந்த உண்மைகள் தெரியும்.தயவுசெய்து முகநூலில் வரும் ஆதாரமற்ற கதைகளையும், ஒவ்வொரு விடுதலை இயக்கமும் தங்களைப் புகழ்ந்து தாங்கள் தான் உண்மையான விடுதலை இயக்கம், தாங்கள் தான் கொள்கை வாதிகள் என்று மக்களையும், தங்கள் தங்கள் இயக்கத் தோழர்களையும் ஏமாற்ற வெளியிட்ட புத்தகங்களையும் துண்டு பிரசுரங்களையும், மேடைப்பேச்சு களையும் தயவுசெய்து நம்பி ஏமாற வேண்டாம்.
உண்மையில் இலங்கை தமிழ் மக்களையும் மண்ணையும்காக்கக்கூடிய ஒரு விடுதலை இயக்கம் இருந்திருந்தால், இன்று தமிழ் மக்கள், இலங்கை சரித்திரத்தில் முதன்முறையாக சிங்கள தேசத்துக்கு அடிபணிந்து தமிழர் பிரதேசங்களையும் இழந்து கொண்டு வரும் நிலை இருந்திருக்காது.வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள், 40 லட்சம் இலங்கைத் தமிழர்கள் என்று பெருமை அடித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர்கள் என்று ஆயுதப்போராட்டம் வலுப்பெறத் தொடங்கியதோ, அன்றிலிருந்து தமிழ் மக்கள் அழிவைத்தான் சந்தித்து வந்தோம். தமிழ் மக்களைக் காப்பாற்ற என்று பல இயக்கங்கள் பல கொள்கைகள். தொழில் இந்த இயக்கங்கள் அப்பாவி தமிழ் மக்களை தண்டனைகள் கொடுத்து மரண தண்டனை உட்பட தங்களையே பிரபல்ய படுத்துக்கொண்டு மக்களை பயத்தில் வைக்க ஆரம்பித்தார்கள். பின்பு தாங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இயக்கமும் தங்கள் தவறுகளை தட்டிக்கேட்ட பொதுமக்களை தங்கள் இயக்க தோழர்களே பின்பு மற்ற இயக்கங்களை அழிக்க நினைத்தார்கள் அதில் வெற்றியும் பெற்றார்கள்.வெளிநாட்டில் அகதி வாழ்க்கை வாழ விசா கிடைக்க வெளிநாட்டில் இருந்தவர்கள் போராட்டத்தின் தன்மையை அறியாமல் அல்லது அறிய விரும்பாமல் ஆதரித்தார்கள். அதே மாதிரி மற்ற நாடுகளில் இருந்த அந்தந்த நாட்டு தமிழர்கள் தமிழரின் வீரம் என்று கூறிக்கொண்டு இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆதரித்தார்கள்.குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்த தமிழர்கள் இந்த விடுதலை இயக்கங்களால் இலங்கையில் இருந்த தமிழர்கள் பட்ட கஷ்டங்களை உணர மறுத்தார்கள். இந்த விடுதலை இயக்கங்கள் யாரைக் கொன்றாலும் அவரை துரோகி என்று கூறி மகிழ்ந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 6 கோடி தமிழ் மக்களில் மனதில் கதாநாயகனாக இடம்பிடிக்க போட்டி போட்ட விடுதலை இயக்கத் தலைவர்கள் இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ உண்மையாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.உண்மையில் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் தமிழ் இனம் அழிவதை பற்றி கவலைப்படாமல், பழைய கால ராஜராஜ சோழன் வீரம் திரும்ப வந்து விட்டது என்று கூறி தங்கள் அரசியல் வாழ்க்கைக்கும் பண பலத்துக்கும் எமது போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டது எல்லோருக்கும் தெரியும்.
எல்லோரும் இப்போதும் எழுதுவார்கள் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்று. உண்மைதான் இந்திய மத்திய அரசாங்கத்தின் மறைமுக ஏற்பாடு அது. எம்ஜிஆர் ஒரு காலமும் இந்திய மத்திய அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டு இதுவும் செய்தவர் இல்லை. மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளை எம்ஜிஆர் மூலம் ரகசியமாக தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்தது தான் உண்மை. 83 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை படுகொலை நடைபெறும் வரை எம்ஜிஆர் அரசாங்கம் பிரபாகரனையும் உமாமகேஸ்வரன் ஐயும் இலங்கையிடம் ஒப்படைக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது. அதனால் தான் பிரபாகரன் ஜாமீனில் இருந்து தப்பி இலங்கைக்குப் போனார். 1981ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின்போது தமிழ்நாட்டில் கண்ணதாசன் மிகப்பெரும் ஊர்வலம் இலங்கை அரசுக்கு எதிராக செய்ததாக தகவல் செய்தி வந்தது. அதேநேரம் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் இலங்கையில் தனக்கு பெரும்பான்மையான ரசிகர்கள் சிங்களவர்கள் எனக் கூறிய செய்தியும் வந்தது.
தமிழ்நாட்டில் விடுதலை இயக்கங்களை ஆதரித்த பெரும்பான்மையான தலைவர்கள் சகோதரப் படுகொலையை கண்டிக்கவில்லை. கலைஞர் கருணாநிதி மட்டுமே கண்டித்தார். எமது செயலதிபர் உமா மகேஸ்வரன கலைஞர் கருணாநிதியே சந்திக்கும்போதெல்லாம் யார் உங்கள் எதிரி, உங்களை நீங்களே எல்லாம் அழித்து கொள்கிறீர்கள்., என்று மனம் நொந்து பலமுறை கூறியுள்ளதாக செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறினார். எமது செயல்பாடுகளால் கலைஞர் கருணாநிதி எங்கள் போராட்டத்தை பின்பு மனப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் பிரபாகரன் இடம் சகோதர படுகொலை பற்றி கண்டித்து கூறியிருந்தால், கட்டாயம் பிரபாகரன் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். காரணம் பிரபாகரன் தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஒரு கதாநாயகனாகவே விளங்கினார். ஆனால் அவரை ஆதரித்த தமிழக தலைவர்கள் விடுதலைப்புலிகள் என்ன தவறு செய்தாலும் ஆதரிப்பதோடு, அவர்கள் யாரைக் கொலை செய்து துரோகி என்றாலும் கொலை செய்யப்பட்டவர் பற்றி தெரியாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களும் ஆமாம் துரோகியை தான் கொன்றார்கள் என்று கூறுவார்கள்.எந்தஒரு தமிழ்நாட்டு தலைவரும் எமது ஆயுதப்போராட்ட தலைவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்க வில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
பல உண்மைகளை எழுதப் போனால் வருடக்கணக்காக நாட்கள் எடுக்கும். இந்த அளவு அழிவுக்குப் பிறகும் உண்மையில் என்ன நடந்தது என்று அறிய விரும்பாமல், இன்றும் இந்தியா உட்பட உலக நாடுகளை எங்களை ஆதரிக்கும் எங்களை காப்பாற்றும் என்று பொய்யாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறோம்.எந்த உலக நாடும் உதவி செய்யாது.2009 யுத்தம் முடிந்த பின்பு எல்லா உலக நாடுகளும் இலங்கைக்கு கூறிய ஆலோசனை தமிழர் பகுதிகளை பல்லின மக்கள் கொண்ட பகுதிகளாக மாற்றும்படி. கிட்டத்தட்ட கொழும்பு மாதிரிசகல இனமக்களும் வாழும் பிரதேசமாக மாற்றினால் எதிர்காலத்தில் தமிழினப் போராட்டம் நடக்கும் வாய்ப்பு குறைவு என்று உலக நாடுகள் கூறின.இந்த விடயங்கள் எல்லாம் தெரிந்த முந்தைய ஆயுதக்குழுக்கள். இன்றைய வெள்ளை வேட்டி அரசியல்வாதிகள் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள்.
தொடர்ந்து1988 ஆண்டு நிகழ்வுகள். வசந்த் அவர் நண்பர்களும், இலங்கையில்புளொட் இயக்க விடுதலை போராட்டம் தொடர, இந்தியாவிலிருந்து களவு கொள்ளையடித்து மிகவும் விசுவாசமாக தங்கக் கட்டிகளாக, போதைப் பொருளாக செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் திருச்சி உறையூரில் இருந்து 2 போலீஸ் அதிகாரிகள் நமது வடபழனி அலுவலகம் வந்தார்கள். நெஞ்சு படபடக்க பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் வந்த விஷயத்தை கேட்டேன். அவர்களும் நல்லவிதமாக பேசினார்கள்.அதாவது திருச்சி உறையூர் சரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் இனது வான் வாகனம் சில மாதங்களுக்கு முன்பு களவு போய்விட்டதாகவும், தற்சமயம் அந்த வாகனத்தை புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருடியதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும் அதைப்பற்றி விசாரிக்கவே வந்ததாக கூறினார்கள். நானும் அது தவறான தகவல் என்றும், சென்னையில் கியூ பிரான்ச் கட்டுப்பாட்டில் எனது பொறுப்பில் நான்கு பேர் சென்னையில் மட்டும் இருப்பதாகவும், மற்றும் வேலூர் மருத்துவமனையில் மூன்று பேர் இருப்பதாகவும் கூறினேன். எமது இயக்கத்தின் சார்பில் வேறு யாரும் இந்தியாவில் இல்லை எனவும் கூறி, நீங்கள் விரும்பினால் கியூ பிராஞ்ச் அதிகாரிகளுடன் விசாரிக்கும் படி கூறினேன். அதோட அவர்களிடம் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு பலர் இலங்கைக்கு போகாமல் இயக்கத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் சிலவேளை அவர்களின் வேலையாக கூட இருக்கலாம் என்றும் கூறினேன்.
அடுத்த முறை வசந்த் என்னை தொடர்பு கொண்டபோது, பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினேன். வசந்தும், நண்பர்களும் அந்த வாகனத்தை உருமாற்றி கேரளாவில் விற்றுவிட்டுவிட்டதாக அறிந்தேன். நாங்கள் இருந்த வடபழனி வீட்டைச்சுற்றி சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களே கூடுதலாக கூடியிருந்தார்கள். எமது வீட்டு மதி லோடு சிறந்த அடுத்த பக்கம் ஒரு கராஜ் இருந்தது. அந்தக் கரேஜ் இல் எந்த நேரமும் சினிமா சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டை போடுபவர்கள் கூட்டமாக இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். எங்கள் தோழர்களும் அவர்களோடு பேசிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தான் எங்கள் வாகன சாரதி அருளர் அண்ணே அந்த சண்டைப் பயிற்சியாளர்கள் ஏற்பாடு செய்த, கமலஹாசன் தயாரிப்பில், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் கடத்தல் லாரி ஓட்டுபவராக நடித்தார். படத்தில் சத்யராஜ் துரத்திப் பிடித்து தலையில் துப்பாக்கி வைப்பதாக காட்சி. நாங்கள் நகைச்சுவையாக கூறுவோம், சத்யராஜ் கைத்துப்பாக்கியை தலையில் வைக்க அருளர்அண்ணா கைத்துப்பாக்கியை தட்டிவிட்டு, சத்யராஜ் இடம் இந்த பொம்மை துப்பாக்கி காட்டி என்னை பயமுறுத்த முடியாது ஒரிஜினல் துப்பாக்கி பலவற்றை பார்த்தவன், என்று கூறுவார் என்று நாங்கள் நகைச்சுவையாக படம் பார்த்த நண்பர்களிடம்கூறுவோம்.
தொடரும்

கருத்துகள் இல்லை: