திங்கள், 22 மார்ச், 2021

இலங்கை தனுஷ்கோடி கடலில் நீந்தி கடந்த 48 வயதுடைய தெலுங்கானா ஆசிரியை!

 

veerakesari : தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்த 48 வயதுடைய தெலுங்கானா பெண்.  

dhinamalar :ராமேஸ்வரம்:இலங்கை டூ தனுஷ்கோடி வரை கடலில் 13: 35 மணி நிமிடத்தில் தெலுங்கானா ஆசிரியை ஷாம்லாகோலி 48, நீந்தி சாதனை படைத்தார்.
தெலுங்கானா ஹைதாராபாத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஷாம்லாகோலி, நீச்சலில் ஆர்வமுடைய இவர், மார்ச் 18ல் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றார்.நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தலைமன்னார் கடலில் நீந்த துவங்கிய ஷாம்லா, நேற்று மாலை 5:50 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முதன் முதலாக பெண் ஒருவர் பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதித்தது குறிப்பிடத்தக்கது. இவரை ராமேஸ்வரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்

கருத்துகள் இல்லை: