வெள்ளி, 26 மார்ச், 2021

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி: ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய மந்திரி வலியுறுத்தல்

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி: ராம்நாத் கோவிந்தை சந்தித்து மத்திய மந்திரி வலியுறுத்தல்
தினத்தந்தி  : மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
மும்பை, மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மும்பை போலீசாரை வற்புறுத்தியதாக இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் மராட்டிய அரசை ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
பின்னர் ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறுகையில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே போலீஸ் அதிகாரி சச்சின் வாசே என்பவர் வெடிகுண்டு காரை நிறுத்தி உள்ளார்.
மராட்டிய உள்துறை மந்திரி மாதம் ரூ.100 கோடி மாமூல் கேட்டு போலீசாரை கட்டாயப்படுத்தி உள்ளார். இவையெல்லாம் மிகவும் தீவிர பிரச்சினை.
இது தொடர்பாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளேன்.
அவர் எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தார் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: