ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்

செல்லபுரம் வள்ளியம்மை   : திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் 
இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை.. 
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால்  அதில்  எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும்  இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது  ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு  தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம்   ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று    ஆர் எம் வீரப்பனோ  அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும்  செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால்   ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது  பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.

மேலும் பலருக்கு அது ஒரு சமுக அங்கீகாரம் என்ற கருத்தும் இருக்கிறது.

பிற்காலத்தில் அதன் பெயர் அதிமுக என்று மாறிவிட்டது .
எம்ஜியார் தனது ரசிகர் மன்றங்களை எப்படி வழி நடத்தினார்?
அவற்றால் எம்ஜியார் எப்படி பயன் பெற்றார்?
அவற்றின் கொள்கைகள் என்ன?
அவற்றின் வேலை திட்டங்கள் என்ன?
அவற்றின் சமுக பணிகள் என்ன?
அவற்றின் கணக்கு வழக்குகள் எப்படி நடந்தன?
அவற்றிக்கு வருமானம் எப்படி ?
அவற்றை எப்படி செலவு செய்தனர் ?
இது போன்ற பல கேள்விகள் உள்ளன .
இவற்றில் எந்த கேள்விக்கும் எவரிடமும் முறையான பதில்கள் இல்லை.
எல்லாவற்றிலும் பார்க்க இவற்றை பற்றி கேள்விகள் கேட்பதே கொஞ்சம் வில்லங்கமான விளைவுகளை உண்டாக்கி விடும் எனபதே அன்றைய நிலைமை.
 ஒரு அரசியல் கட்சி இப்படிஎந்த விதமான அமைப்பு ரீதியான எந்தவித நிர்வாக கட்டுமானமும் இன்று எப்படி செயல்பட முடியும்?
ஆனால் அதிமுகவால் அது சாத்தியம் ஆனது! எப்படி?
அது அதிமுக என்கின்ற ஒரு மார்க்கெட்டிங் கம்பனியாகத்தான் செயல்பட்டது இந்த கோணத்தில் அதிமுகவை  ஆராய்ந்தால் மட்டுமே இது  புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

எம்ஜியாரின் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் ஏற்கனவே அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பில்தான் இயங்கி கொண்டிருந்தன .
சக ரசிகர்கள் இடையே எந்தவிதமான கருத்து பரிமாற்றங்களோ  கொள்கை வேறுபாடுகளோ எதுவும் கிடையாது.
எம்ஜியார் ரசிகர் என்ற ஒற்றை திசையில் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டம் அது.

புத்திசாலியான எம்ஜியார் திமுகவின் பின்பலத்தை தனது திரைப்படங்களின் வெற்றிக்கு பயன் படுத்தினர்.
திமுகவின் சமுக நீதி கொள்கைகளை எம்ஜியார் தனது படத்தில் பயன்படுத்தினார். 
அந்த கொள்கைகள் எம்ஜியாரின் கொள்கைகள் என்று மக்கள் நம்பினார்கள்.

திமுகவும் எம்ஜியாரின் ஊடக வெளிச்சத்தை  தனது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தியது.
எம்ஜியாரின் செல்வாக்கு அரசியல் ரீதியானது அல்ல ..
ஆனால் அவை வாக்குகளாக மாறியது. ..

மக்களுக்கு சினிமா வேறு அரசியல் வேறு என்ற புரிதல் இல்லாமல் போய்விட்டது எனலாம்.\

ஒரு அரசியல் கட்சிக்கு இருக்க கூடிய எந்தவிதமான பொறுப்பும் பதில் கூறும் கடமையும் அல்லது தேவையும் கூட அதிமுகவுக்கு அன்று இருக்கவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுவதாகு வேண்டிய ஆள்பலம் அவருக்கு ரசிகர் மன்றங்கள் மூலம் கிடைத்த்தது.
ஒரு திரைப்படத்தை வெற்றிகரமாக ஓடவைக்கும் திறமையை அறிந்த  தொழில் ரீதியான ரசிகர்கள் ( Professional fans ) கணிசமான அளவில்  இருந்தனர்.
ஏனெனில் பலருக்கும் தேவையான  வருமானம் அதில் தங்கி இருந்தது.
 சினிமா வெளியீடு என்ற வியாபரத்தின் நெளிவு சுளிவுகள் ( பிளாக் மார்க்கெட் டிக்கெட் விற்பனை உட்பட) தெரிந்தவர்களாக பலரும் இருந்தனர்.


மதங்களின் பின்னால் ஓடுபவர்களுக்கு அது ஒரு டானிக் போன்ற உணர்வை பல வேளைகளில் தருமல்லவா?
அதே போல எம்ஜியாரின் மன்றத்து ரசிகர்களுக்கும்  அந்த உணார்வு கொஞ்சம் உண்டு.
இவர்களில் பெரும் பான்மை ரசிகர்களுக்கு எம்ஜியார் மீதான பற்றினை தவிர வேறு ஒரு பெரிய கொள்கையும் கிடையாது.
எம்ஜியாரை ரசிப்பதுதான் இவர்களிடையே உள்ள முக்கிய அம்சம்.
ஒருவகையில் இவரகள் எம்ஜியாரின் வாடிக்கையாளர்கள் என்ற மனோ நிலையில் உள்ளவர்கள்.

உளவியல் ரீதியில் நோக்கினால் இவார்களுக்கும் எம்ஜியாருக்கும் உள்ள தொடர்பு என்பது  வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ளது போன்ற ஒரு தொடர்புதான்.
 இதில் படங்களின் டிக்கட் . பிளக் டிக்கெட் வசூல் கமிசன் போன்ற ரசிகர் மன்ற வருமானங்களை குறிப்பிடவில்லை .  ஆனால் அவையும் ஒரு ஊசாத்துணை காரணிகள்தான்.
இந்த வாடிக்கையாளர்கள் எம்ஜியார் படத்திற்கு ஒரு நிச்சயமான விளம்பர  வழங்குனர்களாக செயல்பட்டனர்.
எம்ஜியாரின் திமுக சகவாசம் கூட திமுகவுக்கு எவ்வளவு பயன் பட்டதோ அதே அளவு எம்ஜியாரின் படங்களை வெற்றி படங்ளாக்கவும் திமுக  பயன்பட்டது  எனபது கவனிக்க வேண்டிய உண்மையாகும்..

இந்த ரசிகர்மன்ற வாடிக்கையாளர்களும்   எம்ஜியார் என்ற  திரைப்பட வியாபார முதலாளியும்  அப்படியே அதிமுக என்ற கட்சியை தொடங்கினார்கள்.

ரசிகர் மன்றத்தினர்கள் அப்படீய அரசியல் கட்சியினராக பதவி உயர்வு பெற்றார்கள்.
ஆஸ்தான நடிகர் ஆஸ்தான தலைவர் ஆனார்.
இவை எல்லாம் வெற்றிகரமாக நடந்தது.
இங்கே ஒரு விடயம்தான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது.
ஒரு அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய எந்த விடயமும் பெரிதாக இருக்கவில்லை.

அதிமுக தொண்டர்கள் ஆகிவிட்ட எம்ஜியார் ரசிகர்கள் ஒரு போதும் அவற்றை எல்லாம் எம்ஜியாரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
எம்ஜியாரும் அதை எல்லாம் சிந்திக்கவும் இல்லை .அவை அவருக்கு தேவையும் இல்லை.
அவரது படங்களில் வந்த பாடல்களும் காட்சிகளுமே போதுமாக இருந்தது.
அவரை ரசிப்போர்கள் அந்த அளவுக்குத்தான் அப்போது பக்குவப்பட்டு இருந்தார்கள்.

அவரது அதிமுகவுக்குள் ஒரு போதும் கொள்கை முரண்பாடுகளோ கருத்து மோதல்களோ பெரிதாக ஒருபோதும் வந்ததில்லை.
எல்லாமே ஒரு கம்பனியின் நடைமுறை போல மிகவும் நேர்த்தியாகவே நடந்தன.
அந்த கம்பனியில் தொடர்பு கொண்டிருக்கும் எல்லோருக்கும் பல விதங்களிலும் பணம் மற்றும் இதர உதவிகளும் கிடைத்து கொண்டே இருந்தது.
அவர்களின் உட்கட்சி மோதல் என்பவை தப்பி தவறியும் கொள்கை சார்ந்து நிகழ்ந்ததே கிடையாது.
அதிமுகவுக்கு என்னதான்  கொள்கை என்று எவருக்கும் ஒருபோதும் தெரிந்ததில்லை.
அவர்கள் ஒரு போதும் பொது வெளியில் உருப்படியான விவாதங்கள் செய்தவர்கள் அல்ல.
ஏதாவது ஒரு படத்தில்  புரட்சி தலைவர் எம்ஜியார்  கூறியவற்றை கூறிவிட்டு ஜாலியாக சென்று விடுவார்கள்.
அவர்கள் அரசியலை ஒருபோதும் சீரியசாக எடுத்ததில்லை..

அதிமுக என்பது ஒரு அசல்  மல்டி லெவல் மார்கெட்டிங்  MLM  கம்பனியை ஒத்ததாகும் என்பதில் எந்த சந்தேகம் கிடையாது.  .
அதன் வரலாறு முழுவதும் அதன்  செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.
அப்படியே அச்சு பிசகாமல் எம் எல் எம் கம்பனியை  நடத்தி கொண்டிருகிறார்கள் இன்று வரை.
இதில் தொடர்புடைய அத்தனை எம் எல் எம் ஏஜெண்டுகளுக்கும் இது மிகவும் பழகி போய்விட்டது .
இவர்களுக்கு நல்ல வசதிகள் உண்டு.
பெரிதாக அரசியல் அறிவு பற்றியோ கொள்கைகள் பற்றியோ தெரிந்திருக்கவும் தேவை இல்லை மக்களை பற்றியும் அக்கறை தேவை இல்லை .
இவர்களின் எம் எல் எம் கட்டமைப்பு என்பது மிகவும் பலம் வாய்ந்த அமைப்பாக உள்ளது
இதில் தொடர்பு உடையவர்களுக்கு இதனால் சுய  லாபம் உண்டு.
எனவே இந்த அமைப்பை சார்ந்து இருப்பார்கள் .
இதன் வெற்றியில் தங்களின் வருமானம் தங்கி உள்ளது என்ற எண்ணமும்  நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு .
இது ஒரு பலமான வசதியான கட்டமைப்பு.
ஒரு சாதாரண அரசியல் கட்சியால் இப்படிப்பட்ட அமைப்பை வெற்றி கொள்வதென்பது மிகவும் சிரமமான விடயமாகும்.

வெறும் சுயநலமே நோக்கமாக கொண்ட சராசரி கம்பனி போன்ற இந்த அமைப்பு அரசியலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது எனபது அந்த மக்களின் தோல்வி என்றுதான் கருதவேண்டும்.

ஒரு அரசியல் கட்சி நாட்டை ஆள்வதற்கு பதிலாக ஒரு எம் எல் எம் (MLM ) கம்பனியின் பொறுப்பில் நாட்டை ஒப்படைத்தால் அவர்கள் எப்படி நாட்டை ஆளுவார்கள்?
அவர்கள் இலாபம் சம்பாதிப்பர்கள் . அதை பற்றி கொஞ்சம் கூட மனசாட்சி பற்றி எல்லாம் அலட்டி கொள்ள மாட்டார்கள் . அதெல்லாம் அவர்களின் டி என் யிலேயே இல்லையே?
அவர்களின் டி என் ஏயில் இருப்பதை எல்லாம் கொள்கை என்று சொல்ல முயல்பவர்களை  பற்றி என்ன சொல்வது?
அவர்கள் செய்வது தவறு என்ற சந்தேகமே அவர்களுக்கு வருவதில்லை . அவர்கள் வியாபார கமிசன் ஏஜெண்டுகள்.
.
அரசியல் பொது வெளிகளில் எல்லாம்  வாயில் வந்ததை எல்லாம் அடிச்சு விடும் அவர்களின் அலட்சியம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
அவர்களுக்கு அரிசயல் கருத்து கொள்கை போன்றவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை .
அவர்களின் ஒற்றை நம்பிக்கை தங்களின் MLM    அமைப்பு பட்டிதொட்டி எல்லாம் பரவி இருக்கறது
வாக்குகள் பெறுவதற்கு அவர்கள் கையாளும் வழி என்பது அசல் எம் எல் எம் கம்பனிகளுக்கே உரிய வித்தைகள்தான்.

வாடிக்கையாளரின் ஆசையை தூண்டுவது தங்கள் கம்பனியின் விற்பனையை பெருக்குவதற்கு என்பது எல்லா எம் எல் எம் கம்பனிகளினதும் வாடிக்கைதான்.
இந்த கம்பனி எப்போதும் மக்களின்  பிரச்சனைகளை திசை திருப்புவதையே தொடர் தந்திரமாக பயன்படுத்துகிறது .
மக்களின் அறியாமை மேலும் மேலும் வளர்ப்பது என்றே வேலை திட்டத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது .

தேர்தல்களின் போது மக்களின் பலவீனமான வறுமையை பயன்படுத்தி வெற்றி பெறுவது இன்னும் அவர்களின் அத்தனை தந்திரங்க்ளைளும் தெரிவது அது ஒரு ஈவு இரக்கம் இல்லாத அசல் எம் எல் எம் மார்க்கெடிங் கம்பனி என்ற உண்மைதான்.


திமுக தேர்தல்களில் தோற்பது கொள்கை சார்ந்து அல்ல.
ஒரு எம் எல் எம் மார்கெட்டிங் கம்பனியோடு போட்டி போட்டு வெல்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்
ஒன்று மக்கள் அறிவு பெறவேண்டும் ..  அந்த எம் எல் எம் கம்பனியின் மோசமான சுரண்டலால் மக்கள் வெறுப்படையும் போதெல்லாம் அது தோற்கும் .
மக்கள் எப்போது அரசியல் என்றால் அது ஒரு கொள்கை சார்ந்த விடயம் என்று கருதுகிறார்களோ அப்போது மட்டுமே மக்கள் வெற்றி பெறுவார்கள் .
அந்த விழிப்புணர்வு வரும்வரை  எம் எல் எம் கம்பனி முதலாளிகளே வெற்றி பெறுவார்கள்.
தமிழகம்  பணம் கொடுக்கும் எவருக்கும் எதையும் கொடுக்கும் மாநிலமாகத்தான் இருக்கும்.
மக்களே அவர்கள் விற்பது தமிழகத்தை என்பது உங்கள் நினைவில் இருக்கட்டும்.
நாளையே உங்கள் மாநிலத்தில்  உங்கள் ஊரில் அந்நியர்களிடம் நீங்கள் கை ஏந்தி நிற்கும் காலத்தை நோக்கி வேகமாக ஓடுகிறீர்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

தொழிற்சாலைகள் பெருக வேண்டும் என்று திமுக ஆட்சியில் தேடி தேடி கொண்டு வந்த தொழிற்சாலைகளின் புண்ணியத்தில்தான் தமிழகம் இன்றளவும் பயன்பெற்று கொண்டு இருக்கிறது.
மறுபுறத்தில் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்த கம்பனி முன்வந்தாலும் அவர்களிடம் நாற்பது ஐம்பது வீத கமிஷன் கேட்பார்கள் . அதன் காரணமாக ஏராளமான கம்பனிகள் வேறு மாநிலங்களுக்கு ஓடிவிட்டன்.

இந்த எம் எல் எம் கம்பனியின்  புண்ணியத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் எந்த பெரிய கம்பனியும் தமிழகத்தில் தொழில் தொடங்கவில்லை.
எல்லாம் தமிழகத்தின் எம் எல் எம் கம்பனியின் மகிமைதான்.   
எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல்தான் இவர்களின் கம்பனி நடக்கிறது.

புலிகள் அமைப்புக்கும் அதிமுகவுக்கும் இடையில் எப்போதும் இருந்து வரும் நல்லுறவின் இரகசியம் இதுதான்
திமுக எவ்வளவுதான் விழுந்து விழுந்து புலிகளை ஆதரித்தாலும் அவர்கள் எப்போதும் அதிமுகவையே விரும்புவார்கள் .
அதிமுகாவோடு பிசினெஸ் செய்வது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
அரசியலில் அதிமுக என்னதான் புலிகளை விமர்சித்தாலும் அது எல்லாம் புலிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல . அவர்களின் பணத்துக்கு இவர்களும் இவர்களின் பணத்துக்கு அவர்களும் பரஸ்பரம் வேலை பார்ப்பார்கள்.
இந்த இரு கம்பனிகளினதும் இந்த பரஸ்பர வேலை என்பது மக்களின் வாழ்வை சூறையாடுவதற்கே என்பதை வரலாறு தெளிவாக காட்டிக்கொண்டே இருக்கிறது.

மக்கள்தான் இன்னும் சரியாக விழித்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன்.
உலகத்தில் எந்த நாட்டிலும் அதிமுக போன்ற ஒரு எம் எல்  எம் கம்பனி அரசியல் ஒரு கட்சி போல உருவெடுத்ததில்லை.
அதற்கு காராணம் எம்ஜியார் என்ற மனிதரின் திரைப்படங்களும்  அதில் மயங்கி போன ரசிகர்கள் என்ற மனிதர்களும்தான்.
அந்த ரசிகர்களை கொண்டு அவர் உருவாக்கிய மன்றங்கள்  ஒரு  மதம் போன்ற cult அல்லது ஒரு பிரைவேட் ஆர்மியாகும்.
 அவரது நலம் சார்ந்து அவரது ஏவல் படையாக வளர்ந்தது.  
இந்த உண்மையை காலம் சரியாக கணிப்பீடு செய்யவில்லை என்றே எண்ணுகிறேன்.
இதை அப்படியே தன்கைக்குள் போட்டுக்கொண்டஜெயலலிதா முழுக்க முழுக்க அடிமையும் சர்வாதிகாரியாகவும் என்ற திரைபபடம் போல மாற்றி விட்டார்.
இந்த சர்வாதிகார விளையாட்டு வெறும் அரசியல் என்பதை தாண்டி பகல் கொள்ளையே இஷ்டம் பல நடத்தி காட்டிவிட்டு போய்விட்டார்
கொடைநாடு பாலு ஜுவலர்ஸ் கங்கை அமரன் வீடு இன்னும் கணக்கில் அடங்காத சொத்துக்களை சூறையாடினர் அல்லவா?
இப்போது எடப்பாடி பன்னீர் வகையறாக்கள் அடுத்த கட்டத்திற்கு இந்த எம் எல் எம் கம்பனியை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்.
எம்ஜியார் ஜெயலலிதாவிடம் இருந்த சினிமா கவர்ச்சி ஆயுதம் இவர்களிடம் இல்லை.
அதை ஈடு செய்வதற்கு இவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.
ஒரு கம்பனியானது தனது இருப்பை தக்கவைத்து கொள்ள எதுவும் செய்யும் என்பது அடிப்படை நியதியாகும்.
இனி மக்கள் தங்கள் கடமையை மறக்காமல் விழித்து கொள்ளவேண்டும்.
ஆசையை தூண்டி சட்டை பையில் உள்ள பணத்தை மட்டும் பெறுவது சாதாரண வியாபாரிகளின் செயல்.
ஆனால் இந்த எம் எல் எம் கம்பனிக்காரர்களோ அதையும் தாண்டி ஆசைப்படும் பேராசை வியாபாரிகள் என்பது இவர்களின் கடந்த கால வரலாற்றை நோக்கும் எவருக்கும் புரியும்.
மக்களின் முன் உள்ள மிக முக்கியமான கேள்வியே " எது அரசியல் கட்சி எது அரசியலை முன்னிறுத்தி தொழில் செய்யும் எம் எல் எம் கம்பனி என்பதுதான்.

கம்பனிகளோடு கொடுக்கல் வாங்கல் செய்யலாம் ஆனால் அரசியல் செய்ய கூடாது. !- செல்லபுரம் வள்ளியம்மை 



இந்த இணைப்பில் கியா மோட்டார் நிறுவனத்திடம் எம் எல் எம் கம்பனி எதிர்பார்த்த லஞ்சமும் அதனால் நடந்த விளைவுகள் பற்றிய முழு விபரம்

http://namathu.blogspot.com/2017/05/blog-post_392.html‘‘
தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்க, அதன் உண்மையான மதிப்பில் ஐம்பது சதவிகித தொகையைக் கூடுதலாக அரசியல்வாதிகள் கேட்டனர். வரிச்சலுகை, மின்கட்டணச் சலுகை, சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வசதி ஆகியவற்றைச் செய்து கொடுக்கவும், முறையான அங்கீகாரங்கள் வாங்கவும் ஆட்சியாளர்கள் பெரும்தொகை லஞ்சம் கேட்டனர். இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும், கியா தொழிற்சாலை இந்தக் காரணங்களால்தான் தமிழகத்தை விட்டுப் போனது. கியா மட்டுமில்லை, அதோடு சேர்ந்து அமைய இருந்த சுமார் 70 துணை நிறுவனங்களும் ஆந்திரா போய்விட்டன

கருத்துகள் இல்லை: