திங்கள், 3 ஆகஸ்ட், 2020

சவுக்கு சங்கர் : உனது வீழ்ச்சி எனக்கு வருத்தமளிக்கவில்லை .. நீ விழவேண்டியவன்

Shankar A : அன்புள்ள மதன்,    உனது வீழ்ச்சி எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. நீ வீழ வேண்டியவன். சுயநலத்துக்காக எதையும், எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிபவன். வருடக்கணக்காக உழைத்து, பல்வேறு தடைகளை கடந்து, இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவாக பேசுகிறாய். ஏளனம் செய்கிறாய். கட்சி சார்பானவர்கள் என்று அபாண்டம் பேசுகிறாய்.
இவர்கள் கடுமையாக உழைத்து, பார்ப்பன அழுத்தங்களை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் முன்னேறியவர்கள். ஊடகத்துறைக்கு பெரும்
பங்களிப்பை அளிததவர்கள். உன்னைப்போல ஒவ்வொரு சேனலுக்கு ஒரு டீசர்ட் போட்டு வேலை வாங்கியவர்கள் இல்லை. ஒரே ஒரு கேள்வியால் கூட்டணியை உடைத்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உண்டு. இரண்டு காலம் செய்தியால், பல அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கே உண்டு. தலித்துகள் மீதான தாக்குதலை பதிவு செய்யச் சென்று, சாதி வெறியர்களால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட செய்தியாளர்கள் உண்டு. ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொல்லியதை பொய்யென்று நிரூபிக்க அரசு கொடொவுனுக்குள் சென்று படம் பிடித்து, சிறை சென்ற செய்தியாளர்கள் உண்டு.

ஒரு பத்திரிக்கையாளர் இருக்கிறார். வாரம் ஒரு முறை பேசுவார். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பேசுவார். அவரிடம் பேசி முடித்தால் நான்கு கட்டுரைகள் எழுதுவேன். கலைக்களஞ்சியம் அவர்.

இத்தகைய தகுதியுடைய பத்திரிக்கையாளர்களை நீ ஏளனம் செய்கையில், அவதூறு செய்கையில், அவர்கள் உனக்கு எந்த பதிலும் சொல்லாததற்கு காரணம் பயமா ?

இல்லை

அருவருப்பு. சாக்கடையில் உழலும் பன்றியை பார்த்ததும் வரும் அருவருப்பு.

இதில் சில பத்திரிக்கையாளர்களோடு நான் பழகியிருக்கிறேன். இன்று எனக்கு பல பத்திரிக்கையாளர்களை தெரியும். அவர்களில் பலர் பத்தாண்டுகளுக்கு மேலாக பழக்கம். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்டு வியந்திருக்கிறேன். வியந்துகொண்டிருக்கிறேன். அவர்களிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் நிகழ்த்திய சாதனைகளில் 25 சதவிகிதமாவது செய்து விடவேண்டும் என்றுதான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

நீ என்ன செய்து விட்டாய் ? அரைகுறை புரிதலோடு, அல்லது புரிதலே துளியும் இல்லாமல், மடக்கி மடக்கி கேள்வி கேட்டால் பெரிய பத்திரிக்கையாளனா ? இப்படி சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்பதற்கு, பேஸ்புக்கில் பல ஃபேக் ஐடிக்கள் இருக்கின்றன. பரபரப்பா நாலு பேட்டி எடுத்து போட்டுட்டா மனசுல புலிட்சர் விருது வாங்குன நினைப்பா ?

நீ எத்தகைய இழிபிறவி என்று கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அலுவலக நண்பர்கள் வாட்ஸப்பில் சேனல் முதலாளி பற்றி அடிக்கும் ஜோக்கை எவனாவது முதலாளியிடம் சென்று காட்டுவானா ? அதை செய்ததால் உனக்கு என்ன சேனலையா எழுதி வைத்து விட்டார்கள் ? பேட்டிக்காக வரும் கெஸ்டுகள், கேமரா இல்லாதபோது பேசுவதை எந்த இழிபிறவியாவது செல்போனில் பதிவு செய்வானா ? இனி எவனாவது உன்னை நம்புவானா ?

உன்னை இனி யார் வேலைக்கு சேர்ப்பார்கள் ? பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், ஐ சப்போர்ட் மதன் என்று ஹேஷ்டாக் போடும் எந்த மூதேவியும் உனக்கு உதவப் போவது இல்லை. அவர்களின் அன்றன்றைய பொழுதுபோக்கு நீ.

மூத்த பத்திரிக்கையாளர்களும், நானும் இன்றும் மதிக்கப்படுகிறோம். என்றும் மதிக்கப்படுவோம். மக்களுக்கு யார் பருந்து, யார் ஊர்க்குருவி என்பது நன்றாக தெரியும்.

அடுத்தவர்களின் ஜீவனாம்சத்துக்காக கவலைப்பட்ட நீயே இன்று உனக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா என்று காத்திருப்பது காலத்தின் கோலமே.

அன்புடன்

சவுக்கு சங்கர்
3 ஆகஸ்ட் 2020

கருத்துகள் இல்லை: