tamil.oneindia.com - VelmuruganP : பெங்களூரு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான்
இன்று பிற்பகல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை ட்விட்டரில் உறுதி
செய்தார். அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார். தன்னை சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி
கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இது
தொடர்பாக கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா வெளியிட்டுள்ள ட்விட்
பதிவில், "நான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் நன்றாக
இருக்கிறேன், எனினும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில்
முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில்
என்னை தொடர்பு கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் சுயமாக தங்களை
தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக