அது போறாதுன்னு ராசாவும், ஒரே ஒரு நாள் கூட கோர்ட்டுல போயி நின்னு வாய்தா குடுன்னு கெஞ்சுனதே இல்லியே சார்...?!
போகட்டும்... இப்போ பாஜக ஊழல் செய்யலங்கற மேட்டருக்கு வருவோம்..! ஒவ்வொரு கேள்வியா கேக்குறேன்... தெளிவா பதில் சொல்லுங்க... ஓக்கேவா?
ஓக்கே சார்...
முதல்ல.... 2ஜிங்கறது ஊழலா?
ஆமா சார்...
ஊழல்ன்னா என்ன?
ஊழல்ன்னா திருட்டு சார்.. திருட்டையாவது ஒத்துக்கலாம் சார். ஒரு தனி மனிதன் கிட்டயிருந்து இவன் திருடினா ஒருத்தர் மட்டும் தான் பாதிப்பார். ஆனா ஊழல்ங்கறது... கோடிக்கணக்கான பொது மக்களோட வரிப்பணம்... அது பல கோடி மக்களுக்கு நலத்திட்டங்களா அரசாங்கம் மூலம் போக வேண்டியது... அதை இவனுங்க ஆட்டைய போடுறது... திருட்டை விட மோசமான குற்றம் சார்..!
ஓஹோ... அதாவது... கோடிக்கணக்கான மக்களுக்கு போக வேண்டியதை மடை மாற்றி ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ அல்லது சின்ன குழுவுக்கோ போற மாதிரி பண்ணிட்டு... அதுக்காக கமிஷன் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு தான் ஊழல்ங்கறீங்க இல்லையா?!
எக்ஸாக்ட்லி சார்... கரெக்ட்டா புரிஞ்சுக்கிட்டீங்க..!
இல்ல.. எனக்கு அது ஏற்கனவே புரியும், உங்களுக்கும் புரிஞ்சிருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்...!
சரி.. இப்ப சொல்லுங்க... ராசா 2ஜில ஊழல் பண்ணினார்ன்னு சொன்னீங்களே.... அதனால கோடிக்கணக்கான மக்களுக்கு போக வேண்டிய பணம் எதாவது தடுத்து நிறுத்தப்பட்டுச்சா சார்..?!
ம்ம்ம்ம்... அப்டி சொல்ல முடியாது... நேரடியா இல்லாட்டியும்... அதை ஏலத்துக்கு விட்டிருந்தா, 1.75 லட்சம் கோடி அரசுக்கு வந்திருக்கும். அந்த பணத்தைக் கொண்டு அரசு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்திருக்கும் சார்..!
ஓக்கே சார்.... நீங்க சொன்னா மாதிரி... அதாவது நீங்க எப்ப சொந்தமா யோசிச்சி சொல்லியிருக்கீங்க... அப்ப சி ஏ ஜி சொன்னதா ஊடகங்கள் எல்லாம்... குறிப்பா பாஜக ஆர் எஸ் எஸ் திம்மிகள் சொன்னத நம்பி, நீங்க சொன்னா மாதிரி.... மோடி ஆட்சில 4ஜிய ஏலம் விட்டதுல ஒன்னே முக்கா லட்சம் கோடி பணம் அரசுக்கு வந்துச்சா சார்?!
அது வந்து சார்... அவ்ளோ பணம் வரல சார்...!
4ஜிக்கே... அவ்ளோ பணம் வரல... அப்பறம் எப்புடி சார் 2ஜில அவ்ளோ பணம் வந்திருக்கும்ன்னு யாரோ சொன்னத நம்புனீங்க?! நம்பி அதையே இன்னமும் ஊழல்ன்னு வேற சொல்றீங்க?!
அது... அது வந்து சார்... நீங்க கேக்குறது லாஜிக் படி ஓக்கே தான் சார்... ஆனா அதுல ஏதேதோ.. என்னன்னமோ சொன்னாங்க சார்.. முதல்ல வந்தவங்களுக்கு... அப்பறம் சின்னச் சின்ன கம்பெனிங்க... இப்டீன்னெல்லாம் நிறைய சொன்னாங்க சார்.... ஆனா ஒன்னேமுக்கா லட்சம் கோடீன்னோடுன பக்குன்னு ஆகிப் போச்சா... அதான் அப்ப ரொம்ப ஆடிட்டோம்... இப்போத்தான் லேட்டா புரியுது.. ஹெ.. ஹெஹ்... ம்ம்ம் க்கும்...!
சரி விடுங்க சார்... உங்க முட்டாள்தனத்தை நினைச்சா இப்ப உங்களுக்கே வெக்க வெக்கமா வருதுன்னு புரியுது. ஆனா நீங்க ஊழல்ன்னா இன்னோரு மேட்டர் சொன்னீங்கல்ல..?!
என்னா மேட்டர் சார்..?!
அதாவது, கோடிக்கணக்கான மக்களுக்கு போக வேண்டிய பணம் தடுக்கப்பட்டால் அது தான் ஊழல்ன்னு...
ஆமாம் சார்...
இப்போ 2ஜி ல ஆ. ராசா ஏலத்துக்கு விடாம நிறைய சின்னச் சின்ன கம்பெனிகளுக்கு
லைசென்ஸ் கொடுத்ததால... செல்ஃபோன் கட்டணங்கள் எல்லாம் குறைஞ்சுதே
நினைவிருக்கா சார்?!
ஆமா சார்.. அது வரைக்கும் கால் ரேட்டு 2ரூவா, 3 ரூவா இருந்ததெல்லாம் சர்ருன்னு 50 காசு, 30 காசுன்னு இறங்கிடிச்சி சார்..
அதுக்கு என்ன காரணம்ன்னு நினைக்கிறீங்க?
வேற என்னா சார்... நிறைய சின்னச் சின்ன காம்படீடர்கள களத்துல இறக்கி விட்டதால, பெரிய பெரிய முதலைங்க எல்லாம் ரேட்டை குறைக்க வேண்டியதா போச்சு, அதுனால கிராமத்துல இருந்த குப்பன், சுப்பன் எல்லாம் செல்லுல பேச ஆரம்பிச்சிட்டானுவோ...!
ஓகே.. அப்ப நீங்க சொல்றது படி பார்த்தா, 2ஜில ஆ. ராசா எடுத்த முடிவுனால கோடிக்கணக்கான மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பணம் தடுக்கப்படலைங்கறத ஒத்துக்குறீங்களா?
ஆமா சார் ஒத்துக்கறேன்...
அதே சமயம்... கோடிக்கணக்கான மக்களுக்கு தங்கள் மாதாந்திர செல்ஃபோன் கட்டண பட்ஜெட்டுல ஒரு அமௌண்ட்டு மிச்சமானதுங்கறதையும் ஒத்துக்கறீங்களா?!
உண்மை தான் சார்...!
இன்னொரு பக்கம், அதுவரையிலும் அதிக ரேட்டுல வித்துக்கிட்டிருந்த பெரிய மாஃபியா முதலாளிங்களுக்கு இதுனால நட்டம்ங்கறதையும் ஏத்துக்குறீங்களா சார்?
நிச்சயமா...
அதாவது மக்களுக்கு போக வேண்டிய பணமும் தடை படல.... மக்களுக்கு மாசா மாசம் ஒரு தொகை மிச்சமானது..., குறிப்பிட்ட பெரு நிறுவனங்களுக்கோ, குழுவுக்கோ எந்த லாபமும் ஆ. ராசா 2ஜில எடுத்த முடிவால இல்லைங்கறது தெளிவாயிடிச்சா சார்..!
எஸ் சார்...
என்னாத்த நொஸ் சார்..?! அப்ப 2ஜில ஊழல் இல்லங்கறத ஒத்துக்குறீங்களா சார்...!
ஆமா சார் ஒத்துக்கறேன்...!
சரி இப்ப பாஜக மேட்டருக்கு வருவோம்...
மோடி வந்தோடுன மொதல்ல சொச்சி பாரத்துன்னு சொல்லி நீங்க கட்டுற வரியில அதுக்கும் ஒரு அமௌண்ட் மக்கள்கிட்டயிருந்த வாங்குனாங்களா?!
ஆமா சார்...
ஆனா இந்த ஆறு வருஷத்துல இந்தியாவுல எந்த ஒரு சின்ன இடமாவது முன்னாடி இருந்ததை விட சுத்தமாகியிருக்கா சார்?!
அட போங்க சார்... செண்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆஃபீஸே கலீஜா இருக்கு சார்..!
அப்போ மக்கள்கிட்டேயிருந்து பணத்தையும் ஆட்டைய போட்டு, அரசாங்கமும் பணம் ஒதுக்கி எக்கச்சக்கச்சக்க விளம்பரம் கொடுத்து பணத்தை விரயம் செய்தும் ஒரு பலனும் இல்லைங்கறீங்க... அதுனால இது ஒரு ஊழல் தானே சார்?!
கண்டிப்பா இது பெரிய ஊழல் தான் சார்... ஒத்துக்கறேன்...!
சரி அடுத்ததா டீ மானிடைசேஷன்னு சொல்லி நம்ம பணத்தையெல்லாம் மூனு மாசம் முடக்குனாங்களே... கருப்புப் பணம் ஒழிஞ்சுதா சார்?!
எங்க சார்.... ஆர். கே. நகர்லயும் அன்பு நாதன் வீட்டுலயும் பார்த்தாலே
தெரியலயா சார்?! கருப்புப் பணம் இன்னும் கனஜோரா கொடி கட்டிப்
பறக்குதுன்னு...!
அப்போ இதுலயே சில பேருக்கு சாதகமா ஏன் ஊழல் நடந்திருக்கக் கூடாது?!
நிச்சயமா சார்.... மக்களுக்கு பயன் இல்லன்னா, மக்களை கஷ்டப்படுத்தினாலே அது ஊழல் தான் சார்...!
அது போகட்டும் சார், பதஞ்சலி, பதஞ்சலின்னு ஒரு நிறுவனம் திடீர்ன்னு அஞ்சு வருஷத்துல பல லட்சம் கோடி வியாபாரம் செய்யுது... நூறு வருஷத்துக்கு மேல இந்த துறைல இருக்குற கம்பெனியெல்லாம் கூட தொட முடியாத உயரத்தை அந்த கம்பெனி மூனே வருஷத்துல தொடுறதும்... அதுக்கு மோடி நேரில் போய் ஆசீர்வதிப்பதும்.... உங்க கண்ணுக்கெல்லாம் வித்தியாசமா... அதாவது ஊழலா படுலயா சார்..?!
அட ஆமால்ல...?! இதை அடுத்த ஆட்சியாளர்கள் நோண்டுனா பெரிய பூதம்ல்லாம் வரும் போலயே சார்...!
கொரானா ஃபண்டுக்கு பிரதமர் நிதிக்கு அனுப்புன பணத்தை பத்தி கேட்டா பதில் சொல்ல மாட்றாய்ங்க... இதோ இப்பக் கூட காட்டை அழிச்சி பெரிய்ய கம்பெனிங்க கட்டுறதுக்கு ஒரு சட்டம் போடுறாய்ங்க... கீழ இருக்கறவங்க எல்லாம் படிக்கவே முடியாத படிக்கு புதிய கல்வி கொள்கையை கொண்டுட்டு வர்றாய்ங்க...
இதெல்லாம் ஊழல்ங்கறத விட மிக மோசமனது சார்...
சார்... திமுக காரங்க சுத்த வேஸ்ட்டு சார்... வெறும் வாய் தான்... நல்லா மக்களுக்கு செய்யிறாங்க... ஆனா அதையே ஊழல்ன்னு எதிர்க்கட்சிக்காரனுங்க மக்கள்கிட்ட சொல்லி இவிங்கள கவுத்துடுறாய்ங்க...! ஆனா இவனுங்க இவ்ளோ தில்லாலங்கடி வேலை பண்ணியும் அது மக்கள் கிட்ட போகாதபடி பார்த்துக்குறாய்ங்க...!
நன்றி. : சவுமியன் வைத்தியநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக