செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பா.ஜ.,வில் இணையவில்லை: தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வம் பல்டி ( பேரம் படியல்லை?)

latest tamil newsதினமலர் : புதுடில்லி: பா.ஜ.,வில் இணைவதற்காக டில்லி வரவில்லை என ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கு.க. செல்வம். ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியை செல்வம் எதிர்பார்த்திருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அந்த பதவி, இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவுக்கு வழங்கப்பட்டது. இதனால், செல்வம் ஏமாற்றத்தில் இருந்தார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் எல். முருகனுடன், செல்வம் டில்லி சென்றார். அங்கு இருவரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.ஆனால், பின்னர் நிருபர்களிடம் பேசிய கு.க.செல்வம் கூறியதாவது: பா.ஜ.,வில் இணையவதற்காக நான் டில்லிக்கு வரவில்லை. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவே டில்லி வந்தேன். 

நாளை நடக்கும் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் வேண்டும் என பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதற்காக டில்லி வந்தேன். நட்டா சந்தித்ததற்கு நன்றி கூறவே அவரை சந்தித்தேன் . தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் உடனடியாக கண்டிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன். பிரதமர் மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். ராகுலுடனான உறவை முற்றிலும் துண்டிக்க வேண்டும். என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால் தயாராக உள்ளேன் . இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: