நிலை என்ன
இந்த விமானத்தில் 184 பேர் இருந்துள்ளனர். இதில் 10 குழந்தைகள் இருந்தனர். மொத்தமாக 6 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். 2 பைலட்கள் இருந்துள்ளனர். இதில் விமானத்தின் முன் பாகம் அப்படியே
உடைந்து போனதால், விமானிகள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. மற்ற பயணிகளின் நிலை தெரியவில்லை.எப்படி வந்தது
இந்த விமானம், ஓடு பாதையில் சறுக்கில் கீழே விழுந்து, மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழைதான் இதற்கு காரணம் ஆகும். ஓடு பாதை மிக அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் கீழே இறங்கியது விமானம் சறுக்கி உள்ளது. அதேபோல் இந்த விமான நிலையம் மலை மீது இருக்கும் சிறிய ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும் .
தெரியவில்லை
இந்த விமானத்தை இறக்கும் முன்பே அங்கு மழை காரணமாக சரியாக எதுவும் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது ஓடுபாதை மொத்தமாக மங்கலாக இருந்துள்ளது. 2 கிமீ தூரத்திற்கு குறைவாகவே தெரிந்துள்ளது. இதுதான் விமானிகள் சரியாக விமானத்தை இறக்க முடியாமல் போனதற்கு காரணம் என்கிறார்கள்.
மழை பெய்தது
அதேபோல் விமானத்தை இறக்கிய சமயத்திலும் அங்கு மிக மோசாமான் பழை பெய்து கொண்டு இருந்தது. ஓடு பாதை 10ல் விமானத்தை இறக்கும் போது விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி சென்று, கீழே விழுந்து இரண்டாக பிளந்து இருக்கிறது. மொத்தம் 300 மீட்டர்கள் இந்த விமானம் சறுக்கி சென்று அதன்பின் இரண்டாக பிளந்து இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக