இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் மின்விசிறி பொருத்தப்படும் இரும்பு கம்பியை எடுத்து சரோஜாவை தாக்கி உள்ளனர். அதில் வலி தாங்க முடியாமல், அவர் அலறினார். இதனால் சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினார்கள். உடனடியாக விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் சரோஜாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக கூறி ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றார்கள். அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து எந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர் என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே சூரம்பட்டிவலசு சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்றுகொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் என்பதும், 2 பேரும் தாக்கியதில் சரோஜா உயிரிழந்ததால், அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்து விட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து புதைத்த சரோஜாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்பிறகு ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி முன்னிலையில் நேற்று மாலை உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. உடல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு, அதை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட விக்னேஷ், அருண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:-
சரோஜா இறந்த சம்பவத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல், அவரது மகன்கள் தாயின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்துவிட்டனர். வருவாய்த்துறையினரின் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்று (வியாழக்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வெளிவரும். அதில் சரோஜா கொலை செய்யப்பட்டது உறுதியானால், கொலை வழக்காக மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக