மின்னம்பலம் : தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து வந்த 17 பேர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று 5,883 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 2,90,907ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,043 பேர் உட்பட இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 618 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வரும் நிலையில் இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக இன்று பாதிப்பு 1000க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. இன்று 986 பேர் உட்பட இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று, செங்கல்பட்டில் 475 பேருக்கும், தேனியில் 452 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. -கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக