விசாரணையில் பிரியங்கா தற்கொலைக்கு முன்பு
எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில்
பிரியங்கா, திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார்
120 பவுன் நகைகள் கேட்டனர். முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம்
நடத்தப்பட்டது. மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ்குமார் மற்றும்
அவரது தாயார் என்னைக் கொடுமைப்படுத்தினர்.
இதனால் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தேன். மேலும் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவது கண்டு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடிதம் கிடைத்ததையடுத்து உயர் போலீசார் அதிகாரிகளிடம் நடந்ததை சொன்ன காவல்நிலைய போலீசார், அவர்களின் அறிவுறுத்தலின்படி வரதட்சணை கொடுமையின் கீழ் நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப் பதிவு செய்து, நிரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக