சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் பாலகிருஷ்ணன், முத்துகணேஷ் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணைக்கு முதலில் அரசு உத்தரவிட்ட நிலையில் சிபிஐ கையிலெடுக்கும் வரை விசாரணையில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ரேவதி என்ற பெண் காவலர் சாட்சியாக மாறினார். காவல் நிலையத்தில் நடந்த கொடுமைகளை எல்லாம் ரேவதியே வாக்குமூலமாக தெரிவிக்க, இந்த வழக்கு உறுதியானது. உயர்நீதிமன்ற நீதிபதிகளே ரேவதிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்கள். அந்த சூழலில் சிபிஐ விசாரணை தொடங்கியது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது? விசாரணை பற்றி சிபிஐ வட்டாரத்தில் பேசினோம்.
“ஏடிஎஸ்பி கலைமணி தலைமையில், டெல்லியைச் சேர்ந்த டிஎஸ்பி வி.கே. விஜயகுமார் சுக்லா விசாரணை அதிகாரியாகக் களத்தில் இறங்கினர். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுள்ளார் சிபிஐ ஏடிஎஸ்பி கலைமணி. அந்த அறிக்கையில், கை, கால், உள்ளங்கை, உள்ளங்கால், முதுகு, பின் பகுதிகளில் லத்தியால் தாக்கப்பட்டிருப்பதையும், வயிறு, நெஞ்சு, கன்னப் பகுதியில் கையால் தாக்கப்பட்டிருப்பதையும் பதிவுசெய்துள்ளார் டாக்டர். மேலும் உடல் முழுக்க காயத்தின் அடையாளங்கள் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஜெயராஜுக்கு சுகர், பிரஷர் இருந்ததும், அதற்கு மாத்திரை எடுத்து வந்ததும், பென்னிக்ஸுக்கு, சிறிய அளவிலான இதய பிரச்சினை இருந்ததும் தெரியவந்துள்ளது.
குற்றப் பத்திரிகை எப்போது?
சிபிசிஐடி போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டும், சிபிஐ விசாரணை செய்ததும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது என்கிறார்கள் சிபிஐ போலீஸார். சிபிஐ விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட விபரங்களை வைத்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அது நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் ” என்று சொல்கிறார்கள் சிபிஐ தரப்பில்.
-வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக