வெள்ளி, 12 ஜூன், 2020

அமெரிக்க இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிபோனால் ... என்ன நடக்கும்?

கிளிமூக்கு அரக்கன் : அமெரிக்க வாழ் வைதீகர்களுக்கு வேலை போகிறதாமே நாம் மகிழ்ச்சியடையலாமா?
எவ்வளவுதான் அவர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக நம்மை சுரண்டியிருந்தாலும் அவர்களை அழித்துவிட்டு நாம் வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. அடுத்து அவர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பினால் இங்கு தனியார் நிறுவனங்களில் வைஸ் பிரசிடன்ட், சீனீயர் வைஸ் பிரசிடெனட் என்று அவர்களுடயை அத்திம்பேர்கள் உடனே வேலை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள்.
உங்களது பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்று வேலையில் இருந்து தூக்கிவிட்டு அவர்களை அந்த இடத்தில் கொண்டுவருவார்கள். நன்றாக கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கு போனவருடமே ரேட்டிங் குறைத்து போட்டிருப்பார்கள்.
ஒரு காலத்தில் பள்ளி தலைமையாசிரியர்களில் இருந்து மின்சார வாரிய பொறியாளர் வரை வைதீகர்கள் மட்டுமே பெரும்பாலும் இருந்தார்கள்.
அவர்களது வாரிசுகள் அமெரிக்கா சென்று குடியேறியதால்தான் இட ஒதுக்கீட்டின் மூலம் நம்மவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் மீண்டும் வந்தால் அவர்களுக்கு எப்படியும் வாய்ப்பு கிடைத்துவிடும் அதிலும் பாதிக்கப்படுவது சூத்திரர்களாகத்தான் இருக்கும்.
பல வைதீகர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுவிட்டார்கள். முதல்தலைமுறை பட்டதாரியான பல இளைஞர்கள் H1B விசாவில் இருக்கிறார்கள், அவர்கள் இங்கு வந்தால் உடனே வேலை வாங்கித்தர வைதீகர்களின் அத்திம்பேர்களைப் போன்று அவர்களுக்கு யாரும் இங்கில்லை.
அடுத்தவர்கள் வீழ்ச்சியில் மகிழ்ச்சியுறும் வைதீகர்களைப் போலில்லாமல் மற்றவர்களும் வாழட்டும் நாமும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற திராவிடப் பண்போடு இருப்போம்.

கருத்துகள் இல்லை: