வெள்ளி, 20 மார்ச், 2020

சீனாவில் ஒரு புதிய கொரோனா நோயாளி கூட இல்லை

latest tamil news
latest tamil news தினமலர் :  பீஜிங்: கொரோனா வைரஸ், தற்போது, மொத்த உலகையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 2.04 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 83 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் மட்டும் 80,894 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு 3,237 பேர் உயிரிழந்துள்ளனர்.
>சீனாவில் தற்போது இந்த வைரசின் வீரியம் வெகுவாகக் குறைந்துள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அங்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன.
கொரோனா பரவிய நாளில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட, 80 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து, 24 மணி நேரமும் பணியாற்றி மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் வீடு திரும்பி வருகின்றனர்.


சீனாவின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி மி பெங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
சீனாவில், கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணம் ஹூபே. அங்கு கடந்த இரு வாரமாக, புதிய நோயாளிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இரு மாதங்களுக்கு மேலாக ஹூபே மருத்துவமனைகளில் வேலை செய்த பணியாளர்கள் தற்போது வீடு திரும்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

latest tamil news



தற்போது சீனாவில், 7,336 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 2,070 பேர் சற்று கடுமையாகவும், 503 பேர் கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

latest tamil news



கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக, சீனா அழித்தொழித்திருப்பது பலருக்கும் நம்பிக்கையளித்துள்ளது. ஆனால், ஒரு சிலர், 'கடந்த ஆண்டின் இறுதியிலேயே இந்த வைரஸ் குறித்து மருத்துவர்கள் எச்சரித்தனர். அவர்களை சீன சுகாதாரத்துறை அலட்சியம் செய்தது. அப்போதே வைரஸ் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், உலகம் முழுவதும் கொரோனாவின் கொலைவெறி அரங்கேறியிருக்காது' என, சீன அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: