ஜூனியர் விகடன் : 65000 மரக்கன்றுகளை அகற்றிவிட்டு சாலை...
வைத்தியலிங்கத்தின் தில்லாலங்கடி.
“ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கத்தின் மகன் தொடங்கியிருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் பாதை அமைப்பதற்காக கிராமப் பொது நிலத்திலிருந்த 65,000 மரக்கன்றுகளை அகற்றிவிட்டனர்” என்று குற்றம்சாட்டுகின்றனர் செங்கல்பட்டு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி மக்கள்.
சுமார் இருபது வருடத்துக்கு முன்பு அஞ்சூர் ஊராட்சிப் பகுதியில் ‘மஹிந்திரா வேர்ல்டு சிட்டி’ என்ற தொழில் பூங்கா தொடங்கப்பட்டபோது 76 ஏக்கர் நிலம் அஞ்சூர் ஊராட்சிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது. அதில் 51 ஏக்கர் திறந்தவெளிப் பகுதியாகவும் மீதம் 25 ஏக்கர் நிலம் சாலைகள் அமைத்தும் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் தான், ராஜ்யசபா எம்.பி-யான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு 3.45 ஏக்கர் நிலம் வாங்கி, பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறார். இந்தப் பள்ளிக்காகத்தான் அரசு நிலத்தில் விதிகளைமீறி சாலை அமைக்கப் படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், “அஞ்சூர் ஊராட்சிக்கு ‘மஹிந்திரா சிட்டி’ நிறுவனம் தானமாக வழங்கிய நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக, அடர் குறுங்காடு திட்டத்தின்கீழ் 65,000 மரக்கன்றுகள் நடப் பட்டிருந்தன. அந்தப் பகுதியை ஒட்டிதான் எம்.பி வைத்தியலிங்கத்தின் மகனுக்குச் சொந்தமான பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்தநிலையில், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லீமா ரோஸ், மரக்கன்றுகள் நடப்பட்டிருந்த இடத்தில் சாலை மற்றும் சமுதாயக் கூடம் அமைக்கப்படவிருப்பதாகச் சொல்லி, மரக்கன்றுகளை அகற்ற முயற்சி செய்தார். நாங்கள் ‘ஆர்டர் இருக்கிறதா?’ என்று கேட்டதற்கு, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு தயார் செய்யப்பட்ட முன் அனுமதிக் கடிதத்தைக் காண்பித்தார்.
அந்த இடத்தில் அமைக்கப்படும் சாலை, ஊர் மக்கள் யாருக்கும் பயன்படாது. வைத்திலிங் கத்தின் அந்தப் பள்ளிக்காகத்தான் அந்தச் சாலை அமைக்கப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. ‘சாலை அமைக்கப்படும் இடத்தில் 65,000 மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. யாருக்கும் பயனில்லாத இடத்தில் 60 அடி சாலை தேவையே இல்லை’ என்று அதிகாரிகளிடம் நாங்கள் மனு கொடுத்தோம். ஆனால், எங்கள் மனுவை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து, அந்தப்பகுதிக்கு போலீஸாருடன் வந்த லீமா ரோஸ், பொக்லைன் இயந்திரம் மூலம் மரக்கன்றுகளை அகற்றி, சாலை அமைக்க உத்தரவிட்டார். மரக்கன்றுகளை அகற்றக் கூடாது என்று வாதிட்டவர்களை போலீஸாரை வைத்து மிரட்டினர். இதனையடுத்து, நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கல்பட்டு கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.
வைத்திலிங்கத்தின் மகன் பிரபு தொடங்கியிருக்கும் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு ஊர் பொதுப்பாதையைக் காட்டித்தான் பஞ்சாயத்தில் முன் அனுமதி வாங்கியிருக்கின்றனர். பள்ளி சார்பாக, பஞ்சாயத்துக்கு தானமாக வழங்க வேண்டிய 35 சென்ட் நிலம் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், கடந்த 26.01.2020 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ‘பஞ்சாயத்துக்கு வழங்க வேண்டிய நிலத்தை உடனடியாகப் பள்ளி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், திட்ட வரைபட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை தேவையில்லை. சமுதாயக் கூடத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதைத்தொடர்ந்து, ஊராட்சிச் செயலர் கருணாகரனைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டனர். இவை அனைத்துக்கும் ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கம்தான் காரணம். நீதிமன்றத்தைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறோம்” என்றார்.
அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், “சாலை அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, ஒரு காலத்தில் நாங்கள் விவசாயம் செய்த பூமி. அந்தப் பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகளைப் பிடுங்கும் போது, ‘ஏன் மரக்கன்றுகளைப் பிடுங்குகிறீர்கள்?’ எனக் கேட்டேன். ‘இந்தப் பகுதியில் மண் வளமாக இல்லை. அதனால் வேறு இடத்தில் நடவு செய்யப் போகிறோம்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். ‘மண் பரிசோதனை செய்தீர்களா?’ என்று நான் கேட்டதற்கு, போலீஸை வைத்து மிரட்டினார்கள். இந்தப் பிரச்னையை நாங்கள் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லீமாரோஸிடம் பேசியபோது, “இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் இதுகுறித்து நான் எதுவும் பேச முடியாது” என்றார்.
வைத்திலிங்கம்
எம்.பி வைத்திலிங்கத்திடம் பேசினோம். “எங்கள் பள்ளிக்குத் தனியே பாதை இருக்கிறது. ஒரு வருடத்துக்கு மேலாகப் பள்ளி இயங்கிவருகிறது. அரசு அமைக்கும் சாலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் எங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக