புதன், 18 மார்ச், 2020

ஏ' பிரிவு இரத்தம் உடையவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடும்- சீனா ஆய்வு அறிக்கை எச்சரிக்கை

தினத்தந்தி : சீனாவில் கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.
 பெய்ஜிங், உகான், ஷாங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட சீனா முழுவதும் உள்ள நகரங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இது சக ஆய்வுகளூடன் மதிப்பாய்வு செய்யப்படவில்லை, மேலும் தற்போதைய மருத்துவ நடைமுறைக்கு வழிகாட்ட இந்த ஆய்வைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. உகானில் கொரோனா வைரஸ் பாதிப்பால்  இறந்த 206 நோயாளிகளில், 85 பேருக்கு ‘ஏ’ வகை ரத்தம் இருந்தது.  ‘ஓ’  ரத்த வகை குறைவாக இருந்து உள்ளது.
இது வெவ்வேறு வயது மற்றும் பாலினக் குழுக்களில் கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.


‘ஓ’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள்   தொற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்க குறிப்பாக தனிப்பட்ட பாதுகாப்பு தேவைப்படலாம்,"

இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான். எனவே ‘ஏ’ ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரத்த வகைகள் மக்கள் தொகையில் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் , மக்கள் தொகையில் சுமார் 44 சதவீதம் பேர் ‘ஓ’  வகை, சுமார் 41 சதவீதம் பேர் ‘ஏ’ வகை. சுமார் 1.1 கோடி  மக்கள் தொகை கொண்ட வுகானில்,‘ஓ’  வகை 32 சதவீதமும், ‘ஏ’  வகை 34 சதவீதமும் ஆகும்.  ஆரோக்கியமான மக்கள் மத்தியில். கோரோனா  நோயாளிகளில், இது சுமார் 38 மற்றும் 25 சதவீதமாக இருந்தது.

முந்தைய ஆய்வுகளின்படி, நோர்வாக் வைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் கடுமையான சுவாச நோய்(சார்ஸ்) உள்ளிட்ட பிற தொற்று நோய்களில் இரத்த வகை வேறுபாடு காணப்படுகிறது.

புதிய ஆய்வின் முடிவுகள்  மருத்துவ நிபுணர்களுக்கு உதவக்கூடும், ஆனால் சாதாரண குடிமக்கள் புள்ளிவிவரங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் ’ஏ’ வகை என்றால், பீதி அடையத் தேவையில்லை. நீங்கள் 100 சதவீதம் பாதிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமல்ல.

நீங்கள் ’ஓ’ வகை என்றால், நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் இன்னும் கைகளை கழுவ வேண்டும் மற்றும் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்

கருத்துகள் இல்லை: