

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 60ஐ எட்டியுள்ளது. கொரோனா தாக்கத்தால் இலங்கையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 'ஆறு மாதங்களுக்கு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டிப் பணத்தை வங்கிகள் வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொழில்துவங்க யாரேனும் விண்ணப்பித்தால் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது' என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா அச்சத்தால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள பெரும் தொழில் நிறுவனங்களும், சிறு தொழில் முனைவோரும், அரசின் இந்த அறிவிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக