வியாழன், 19 மார்ச், 2020

9 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரழப்பு எண்ணிக்கை .. வீடியோ


தினமலர் :  175 பேர் பாதிப்பு கொரோனா வைரசுக்கு இந்தியாவில், இதுவரை 175 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7:37 PM IST
ஈரானில் இந்தியர் ஒருவர் கொரோனா வைரசால் பலி
ஈரான் நாட்டில் இந்தியர் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகி உள்ளார்.
7:30 PM IST
பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4:58 PM IST
இந்தியாவில் 4வது பலி
அயர்லாந்தில் இருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் வந்த 72 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 19) உயிரிழந்தார். இதனால் வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
4:42 PM IST
பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. 176 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தொற்றிற்கு 9,149 பேர் உயிரிழந்துள்ளனர்.
4:27 PM IST
தமிழகத்தில் 3வது நபருக்கு கொரோனா
அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
12:57 PM IST
கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
11:29 AM IST
ரயில்கள் ரத்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டிக்கெட் முன்பதிவு குறைந்ததால், நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாளை (மார்ச் 20) முதல் 31 ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
9:51 AM IST
உறுதி
2 அமெரிக்க எம்.பி.,க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
9:50 AM IST
விடுமுறை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டனிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லண்டனிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
9:49 AM IST
சூழ்நிலை மோசம்
இரண்டாம் உலக போருக்கு பின்னர் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருவதாக ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.
9:49 AM IST
வெளிநாட்டினர் வருவதற்கு இஸ்ரேல் அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது
9:38 AM IST
169 பேர் பாதிப்பு
கொரோனா வைரசுக்கு இந்தியாவில், இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இதுவரை 166 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 144பேர் இந்தியர்கள். 25 பேர் வெளிநாட்டினர்கள். கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
9:11 AM IST
விசா ரத்து
அமெரிக்காவையும் கொரோனா அச்சுறுத்தி வருவதால், அனைத்து நாடுகளிலும், விசா வழங்குவது ரத்து செய்யப்படுவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
9:10 AM IST
விமானங்கள் ரத்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் யாரும் வராததால், சென்னையில் இருந்து கிளம்பும் 50 சர்வதேச விமானங்கள், 34 உள்நாட்டு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
9:09 AM IST
கைதிகளை சந்திக்க தடை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
7:45 AM IST
சண்டிகர் பெண்ணுக்கு கொரோனா
பிரிட்டன் சென்றுவிட்டு, சண்டிகர் திரும்பிய 23 வயதான பெண்ணுக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் பரிசோதனை நடந்தது. அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
6:50 AM IST
பாகிஸ்தானில் கொரோனாவுக்கு முதல் பலி
லாகூர்: பாகிஸ்தானில் கொரோனா தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இது அந்நாட்டில் கொரோவால் நிகழ்ந்த முதல் உயிர் பலி. பாக்.,கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.
12:00 AM IST
பிரதமர் மோடி இன்று உரை
கொரோனா பாதிப்பு தொடர்பாக, இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரயைாற்ற உள்ளார்.
முழு விபரம்:
புதுடில்லி: கொரோனா வைரசுக்கு, இந்தியாவில் இதுவரை 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 176 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசுக்கு உலக அளவில் 9,149 பேர் உயிரிழந்துள்ளனர்.






பலி அதிகரிப்பு:

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு இதுவரை 9,149 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,082 ஆக உயர்ந்துள்ளது. அதில், 85,797 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





இத்தாலியில் 2,978 பேர் பலி:

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 35,713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,025 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் 3,245 பேர், ஈரானில் 1,284 பேர், ஸ்பெயினில் 640 பேர், அமெரிக்காவில் 155 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து சண்டிகர் வந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த பெண் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: