மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீரை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எழும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்
இதனிடையே பரூக் அப்துல்லா மீதான பொதுப் பாதுகாப்புச் சட்டம் மார்ச் 13ஆம் தேதி ரத்துசெய்யப்பட்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பரூக் அப்துல்லா, “இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன். தற்போது நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நான் டெல்லி சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளேன். காஷ்மீர் மக்கள் அனைவருக்காகவும் பேசுவேன்” என்று குறிப்பிட்டார். ஆனால், பரூக் அப்துல்லா இதுவரை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை.
மக்களவையில் நேற்று (மார்ச் 18) உரையாற்றிய விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன், “ஒரு மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாகக் கூறுப்போட்டு சிதைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் நேர்மைக்கும் எதிரானது. இந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை ஜம்மு, காஷ்மீர், மற்றும் லடாக் பகுதிகளைச் சார்ந்த மக்கள் எந்த அளவுக்கு அதை ஏற்றிருக்கிறார்கள், வரவேற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கிற போது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய அவர், “பரூக் அப்துல்லா உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது ஜனநாயகப் படுகொலை. அவர்களை விடுவித்ததாக நாம் அறிய வருகிறோம். ஆனால், உண்மையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க முடியும். மூத்த உறுப்பினர், முதுபெரும் தலைவர் ஃபரூக் அப்துல்லா அவர்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை” என்று சந்தேகம் எழுப்பினார்.
மேலும், “மூன்று யூனியன் பிரதேசங்களை மேம்படுத்துவதற்காக, அவற்றின் வளர்ச்சிக்காக இந்த அரசு கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கிறது என்று இங்கே பலரும் பாராட்டிப் பேசினார்கள். ஆனால், சுதந்திரமாக அந்த மாநில அரசு இயங்கிக்கொண்டிருந்த போக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மிக மோசமான வரலாற்றுக் கறை” என்றதோடு, ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களையும் மீண்டும் மாநிலமாக ஒருங்கிணைக்க வேண்டும்; மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வலியுறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக