Dhinakaran Chelliah ; மத நூல்கள் எதுவும் சுய சிந்தனையை ஊட்டுவதாக வர்களை வந்தடையும்.
இல்லை. அந்த நூல்களைத் தாண்டி நாம் ஏதும் சிந்திக்கத் தேவையில்லை என்பதையே அவை வலியுறுத்துகின்றன. அதனால்தான் மத பற்றாளர்கள் தங்களது குறுகிய வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடிவதில்லை. மத நூல்களுக்குள் தங்களது எல்லையை சுருக்கிக் கொள்வதின் விளைவுதான் மற்ற மதங்களின் மேல் துவேஷம் உருவாவதற்குக் காரணம்.இதை போக்கிக் கொள்வது எளிதான காரியமல்ல.மதம் என்கிற குறுகிய வட்டத்தை விட்டு வெளிவர வேண்டும்.
அதை விட்டு வெளிவந்தவர்கள் பாக்கியவான்கள்!
சுய சிந்தனை

சுயமாக சிந்திப்போர் முதன் முதலாக உணர்வது, அவர்கள் படிக்கும் மத நூல்கள்
மீது தோன்றும் விமர்ச்சனமாகத்தான் இருக்கும். அடுத்து,மதங்களின் மீது
அளவற்ற நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்கும் சக மனிதர்கள் மீது பரிதாபம்
மேலிடும். அவர்கள் மீது இன்னும் அக்கறை கூடும், இது இயல்பானது.
அவர்களுக்காக ஏதாவது செய்து அவர்களது அறியாமையை போக்கும் நடவடிக்கையில்
பலர் ஈடுபடுவர். அதில் ஆர்வம் அதிகமாகும் போது விமர்ச்சனங்களை தவிர்த்தல்
இயலாது போகும். சிலர் இந்த அளவிற்கு கடுமையான விமர்ச்சனங்கள் தேவையா என
என்னிடம் முறையிடுகின்றனர். சிலர் மற்ற மதங்களைப் பற்றியோ, குருமார்களைப்
பற்றியோ, கடவுளர்களைப் பற்றியோ விமர்சிக்க முடியுமா என சவால்
விடுக்கின்றனர். உங்களுக்கு என்ன தெரியும்?
எப்படி எங்களது “......” பற்றி எழுதலாம்?! நடக்கும் தர்ம காரியங்களைப் பற்றித் தெரியுமா, “...” எழுதிய நூல்களை படித்தீரா? மற்ற சமயம் பற்றியோ “.......” பற்றியோ தைரியமாக எழுதிவிட முடியுமா என சவால் விடுக்கின்றனர். இப்படி அனல் பறக்க விவாதிப்பவர்களின் நிலை எனக்கு விளங்குகிறது.அவர்களின் மேல் அன்பு இன்னும் அதிகமாகிறது.
மதங்களின் வைத்து,கடவுளர்களின் பெயர் சொல்லி நல்ல காரியங்களை நடத்துவதாகக் கூறி ஏமாற்றிப் பிழைப்பவர்களே, உங்களுக்கே போர் அடித்து போதுமடா இந்தப் இழி பிழைப்பு என்று கூறும் நாள் வந்துவிட்டது. கொரோனா வடிவில் எல்லா ஏமாற்று வேலைகளுக்கும் முடிவு வந்துள்ளது.கடவுளை வைத்து வித்தை காட்டி பிழைத்தவர்கள் காணாமற் போகிறார்கள். எத்தனையோ சீர்திருத்தவாதிகள், எத்தனையோ நூல்கள், எத்தனையோ இயக்கங்கள், எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ ஊடகங்கள், அரசாங்கங்கள் செய்ய முடியாத காரியத்தை கொரோனா தனியாக சாதித்து வருகிறது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக