ns7.tv/ta : உலகின்
185 நாடுகளில் சுமார் 2.76 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ள
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11,400ஐ கடந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதிவாக்கில் கண்டறியப்பட்ட Covid19 எனப்படும் கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளை தனது பிடியில் வைத்து ஆட்டிப்படைக்கிறது.
பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன, பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.
கொரோனாவிற்கு தற்போதைய நேரப்படி, ( மார்ச் 21 - மதியம் 2.25 மணி) உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11,423ஆக உயர்ந்துள்ள நிலையில் 91,986 பேர் குணமடைந்துள்ளனர்.
இத்தாலியில் தீவிரம்:
கொடிய வைரஸாக உருவெடுத்துள்ள கொரோனாவிற்கு இத்தாலி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 627 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது. மேலும் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,000ஐ கடந்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு சீனாவில் 3,255, இத்தாலியில் 4,032, ஸ்பெயினில் 1,093, ஈரானில் 1,433 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 275 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை 271ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக