tamil.news18.com :
2011-ம் ஆண்டிலிருந்து
இதுவரையில் 3,70,000 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சத்துக்கு மேற்பட்ட
மக்கள் சிரியா போர் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
சிரியாவின்
வடமேற்கு மாகாணத்தில் அரசின் விமானப் படை நடத்திய தாக்குதலில்
இடிந்துவிழுந்த வீட்டிலிருந்த 5 வயது சிறுமி, தங்கையை காப்பாற்றும்
முயற்சியில் உயிரிழந்துள்ளார். மனதை உலுக்கும் இந்தப் புகைப்படம்
இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.
சிரியாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. அதனால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 2011-ம் ஆண்டிலிருந்து இதுவரையில் 3,70,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சிரியா போர் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். இந்தநிலையில், சிரியாவின் இட்லிப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அரஹா பகுதியில் அரசின் விமானப் படை கடந்த புதன்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
அந்த தாக்குதலில் பொதுமக்கள் வாழும் வீடுகள் இடிந்து நொறுங்கின. அப்போது, உள்நாட்டு பத்திரிகையில் வேலை செய்யும் பாஷார் அல் ஷேக் என்பவர் எடுத்த மனதை உலுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்தப் புகைப்படத்தில் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ள ஐந்து வயது சிறுமி, அவருடைய சகோதரியை காப்பாற்ற குழந்தையின் ஆடையை பிடித்துக் கொண்டு இருக்கிறாள்.
அதைப் பார்த்து வேதனையில் ஒருவர் தலையில் கையால் அடித்துக் கொள்கிறார். அந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக