
ஆனால் நேற்று மதியம் வெகுநேரம் ஆகியும்
அவர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதனால் அவருடைய தாயார் வசந்தா தனது மகளை
தேடி உமா மகேசுவரியின் வீட்டுக்கு வந்தார்.
அப்போது
அங்கு உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரும் வெவ்வேறு அறைகளில்
ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி
அடைந்தார். முருகசங்கரன், உமா மகேசுவரி ஆகியோர் மார்பு மற்றும் முதுகில்
கத்தியால் குத்தப்பட்டும், மாரி தலையில் இரும்பு கம்பியால் அடித்தும்
கொல்லப்பட்டு கிடந்தனர்.
விசாரணைக்கு பிறகு போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறுகையில்,
கொள்ளையர்களை
பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலைகள் நடந்த வீட்டில்
கண்காணிப்பு கேமரா இல்லை. இதனால் விசாரணையில் சற்று பின்னடைவு உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இது நகைகளுக்காக நடந்த கொலைகள் போலவே தெரிகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து
வருகிறோம்.
3 அல்லது 4 பேர் கொண்ட கும்பல் இந்த
கொலைகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். வீட்டின் பின்பக்க
வாசலில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையிலும் ஆய்வு செய்து
வருகிறோம் என்றார்.
இந்நிலையில் நெல்லை முன்னாள்
மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை
நடந்த போது வீட்டின் அருகே சுற்றிய இருவரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி
வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை தீவிரமாக
நடைபெற்று வருகிறது. கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பெண்கள் உள்பட 7 பேரிடம்
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக