
அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிசவாசன், எனது பெயரையும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெயரையும் குறிப்பிட்டு செய்தி வந்திருக்கிறது. யாருக்கு தொடர்பு என்று பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும், ஆனால் அந்த தனியார் தொலைக்காட்சி எப்படி எங்களுக்கு அதில் தொடர்புள்ளது என செய்தி வெளியிடலாம். அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்றார்.
அதையடுத்து பேசிய சேவூர் ராமச்சந்திரன், இன்று காலை குறிப்பிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி சிலைக் கடத்தலில் எங்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக தவறான செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. என்னையும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், இந்த ஆட்சியையும் வேண்டுமென்றே கலங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி மீது புகார் கொடுத்துள்ளோம், பிரெஸ் கவுன்சிலிலும் புகார் கொடுத்துள்ளோம் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக