திங்கள், 22 ஜூலை, 2019

ஸ்டாலின் :தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது

தினகரன் :தேனி: தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த அமமுக கட்சியை சேர்ந்த 25 ஆயிரம் பேர், அக்கட்சியில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர். முன்னதாக அமமுக மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கத்தமிழ்ச்செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி முக்கிய நிர்வாகிகளுடன், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதையடுத்து தங்கத்தமிழ்ச்செல்வனை பின்பற்றி, தேனி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த 25 ஆயிரம் பேர், இன்று திமுகவில் இணைந்தனர். இவ்விழாவுக்கு தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.


விழாவில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, மாநில தீர்மானக்குழு இணைச்செயலாளர் ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் போடி லட்சுமணன், ஆண்டிபட்டி ஆசையன் உள்பட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சக்கரவர்த்தி வரவேற்புரையாற்றுகிறார். விழாவையொட்டி நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைவோரை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். எம்.ஜி.ஆருக்கும் இன்றைய அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் எடப்பாடியும், ஓ.பன்னிர்செல்வமும் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டனர். 234 தொகுதிகளில் 200 இடங்களில் வென்று திமுக ஆட்சிக்கு வரும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும். +2 தேர்வில் எவ்வளவு அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழகத்துக்கு வராமல் பார்த்துக்கொண்டவர்தான் கலைஞர் என கூறினார்.

திமுக எம்.பி.க்கள் சாதனை;
ரயில்வே துறையில் இந்தியில் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை திமுக எம்.பி.க்கள் திரும்ப பெற வைத்தனர். தபால் தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற முறையை எதிர்த்து குரல் கொடுத்தது திமுக எம்.பி.க்கள்தான். அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதுவதற்கு உரிமை பி[பெற்று கொடுத்தது திமுக எம்.பி.க்கள்தான் என ஸ்டாலின் பேசினார்

கருத்துகள் இல்லை: