tamil.oneindia.com - VelmuruganP:
டெல்லி: லோக்சபாவில் முத்தலாக் தடுப்பு மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று நிறைவேற்றி உள்ளது.
தலாக், தலாக், தலாக் என மூன்று முறை கூறி பெண்களை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை முஸ்லிம் சமுதயாத்தில் உள்ளது. இந்த முத்தலாக் முறையை தடுக்க மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்து வந்தது.
இந்த சட்டத்துக்கு எதிரக்கட்சிகளிடையே ஆதரவு இல்லை என்பதால் அவசர சட்டத்தை இயற்றியே பயன்படுத்தி வந்தது.
இதன்படி கடந்த ஆட்சியில் மோடி தலைமையிலான பாஜக அரசு லோக்சபாவில் முத்தலாக் தடுப்பு மசோதவை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இந்த மசோதா சட்டம் ஆகாமல் காலாவதியானது. இதையடுத்து கடநத் செப்டம்பரிலும், பிப்ரவரியிலும் முத்தலாக் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.
இந்நிலையில்
தேர்தல் முடிந்து பெரும்பான்மை பெற்று மீண்டும் மோடி அரசு ஆட்சிக்கு
வந்தது. இந்நிலையில் மத்திய அரசு முத்தலாக் தடுப்பு மசோதாவை இன்று மீண்டும்
லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
முத்தலாக் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்து விவாதத்தில் உறுப்பினர்களின்
கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இதையடுத்து
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் முத்தலாக் தடுப்பு மசோதா
லோக்சபாவில் நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஜேடியூ, திரிணாமுல் காங்கிரஸ்
கட்சி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு
செய்து போராட்டம் நடத்தினர். அதிமுக கடந்த முறை முத்தலாக் மசோதாவுக்கு
லோக்சபாவில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முறை ஆதரவு தெரிவித்தது.
தலாக், தலாக், தலாக் என மூன்று முறை கூறி பெண்களை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை முஸ்லிம் சமுதயாத்தில் உள்ளது. இந்த முத்தலாக் முறையை தடுக்க மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்து வந்தது.
இந்த சட்டத்துக்கு எதிரக்கட்சிகளிடையே ஆதரவு இல்லை என்பதால் அவசர சட்டத்தை இயற்றியே பயன்படுத்தி வந்தது.
இதன்படி கடந்த ஆட்சியில் மோடி தலைமையிலான பாஜக அரசு லோக்சபாவில் முத்தலாக் தடுப்பு மசோதவை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் பாஜகவால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இந்த மசோதா சட்டம் ஆகாமல் காலாவதியானது. இதையடுத்து கடநத் செப்டம்பரிலும், பிப்ரவரியிலும் முத்தலாக் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக