சனி, 16 செப்டம்பர், 2017

சென்னையில் தென்னாபிரிக்க போதை பொருள் .. ஒரு கோடி ரூபாய் பெறுமதி .. பெண் கைது

டெல்லியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த சென்னை போலீசார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்த பயணிகளிடன் அதிகாரிகள் தீவிரமான சோதனை நடத்தினர்.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்த பொருட்களை சோதனையிட்டபோது, டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்ற போர்வையில் 44 டப்பாக்களில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் 40 வயது மதிக்கத்தக்க டில்லியா எடினா என்ற அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், அவர் கடத்திவந்த சுமார்  22 கிலோ எடையுள்ள ‘எபெட்ரைன்’ என்னும் போதைப்பொருளை கைப்பற்றினர்.


தென்னாப்பிரிகாவில் இருந்து கடந்த மாதம் முதல் முறையாக டெல்லி வந்த அந்தப் பெண், அங்கிருந்து சென்னை வழியாக விமானம் மூலம் போதைப்பொருளை ஜாம்பியா நாட்டுக்கு கடத்த முயன்றபோது சென்னையில் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

நள்ளிரவு பார்ட்டிகளில் அதிகமான போதைக்காக மதுவுடன் கலந்து தரப்படும் ‘மெதெம்பெட்டமைன்’ என்ற கலவையை தயாரிக்கும் மூலப்பொருளான எபெட்ரைனுக்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. மாலைமலர்

கருத்துகள் இல்லை: