புதன், 13 செப்டம்பர், 2017

புதுச்சேரி: 770 இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து!

புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த 770 மாணவர்களை உடனடியாக வெளியேற்ற இந்திய மருத்துவக்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 - 2017 காலகட்டத்திற்கான மருத்துவப்படிப்பிற்கான அனுமதி செண்டாக் மூலம் நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வின் மூலமாக 238 மாணவர்கள் செண்டாக் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள 770 மாணவர்கள் செண்டாக் மூலம் இல்லாமல், நேரடியாக தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, பெற்றோர்களும், பெற்றோர் கழகத்தினரும் மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் செண்டாக் மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறான முறையில் நிரப்பப்பட்டுள்ளன என வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் செண்டாக் மூலம் சேர்க்கப்படாத மாணவர்களின் சேர்க்கையானது ரத்து செய்யப்படுகிறது என் உத்தரவிட்டுள்ளது. இதனால், இரண்டாம் ஆண்டு மருத்துவப்படிப்பு பயிலும் 770 மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: