
சந்திக்கிறார். முரசொலி பவள விழாவில் பங்கேற்றார் என்பதெல்லாம் ஓகே.. ஆனால் அவர் அதிமுகவை தாண்டி எந்த அரசியலையும் பேச மறுக்கிறார். இதுவரை மத்தியில் ஆளும் மக்கள் விரோத பாஜகவைப் பற்றி எதுவும் பேசவில்லை.. இந்த மாதிரியான நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குகிறேன் என்று சொல்கிறார். தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்து பாஜகவிற்கு சாதகமாக அதன் B டீமாக செயல்படுவாரோ என்ற அச்சமும், பாஜகவின் ஸ்லீப்பர் செல்லோ என்ற ஐயமும் வருவதை தடுக்க முடியவில்லை.. அவர் பாஜகவைப் பற்றி பேசினால் தான் அவர் யார் என்று உணர்த்தும். அதை கமல் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக