வியாழன், 7 ஜூலை, 2016

சுவாதி கொலை வழக்கு ஒரு சுப்பர் ஸ்பெசாலிட்டி வழக்கா?

ஒரு கொலை நடந்தால்...போலீஸ் விசாரணையை அவனது மனைவி இடமிருந்துதான் தொடங்குவார்கள் ...அவளுக்கு கள்ளக்காதல் இருந்து அதற்காக இந்த கொலை நடந்திருக்கோமோ என்ற கோணத்தில் தான் விசாரணை தொடங்கும்... அய்யோ அவளே கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள்..அவளை கொச்சைப்படுத்தி மேலும் துன்புறுத்த வேண்டாம் என்று போலீசார் நினைப்பதில்லை..விடுவதுமில்லை.. அதுபோல ஸ்வாதி கொலையிலும்...போலீஸ் தனது வழக்கமான பாணி பின்பற்றக்கூடாது என்று அவரின் பெற்றோர்களும் உறவினர்களும் போலீசுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள்..எங்களை போலீஸ் கேள்விகள் கேட்டு தொல்லை தரக்கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கைவைத்ததாகவும் செய்திகள் வருகின்றன... அதன் விளைவு... இன்று பேட்டி அளித்த காவல்துறை உயர் அதிகாரி...ஸ்வாதியின் பெற்றோர்கள் விசாரணைக்கு மிகவும் ஒத்துழைத்தார்கள் என்று அவர்களுக்கு நன்றி நன்றி என்று திரும்ப திரும்ப சொல்கின்றார் ? அப்படி நன்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன ?


மற்ற வழக்குகளை விசாரிக்கும் போது இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் ஊடகங்கள் வாயிலாக நன்றி சொல்வதில்லையே ஏன் ?... ஏன் என்றால் அவாளுடைய செல்வாக்கு அப்படி ... இருவேறு நீதி முறைகள்....இங்கே.. திருச்சி கே,ஏன் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆயின... சைதாப்பேட்டை எம் எல் ஏ காணாமல் போய் பல ஆண்டுகள் ஓடி விட்டன... அந்தக்கொலை குற்றவாளிகளை இன்னுமும் ஏன் காவல்துறை..கண்டுபிடிக்கமுடியவில்லை... ஏன் என்றால் செத்தவர்கள் பூணூல் போட்டு இருக்கவில்லை.
Damodaran Chennai

கருத்துகள் இல்லை: